ஏம்பக்கோட்டை ரஹீமா பரக்கத் தீனியாத் மக்தப் மதரஸாவில் நடைபெற்ற மாணவிகளின் கருத்தரங்கம்.!!ஏம்பக்கோட்டை ரஹீமா பரக்கத் தீனியாத் மக்தப் மதரஸாவில் பயிலும் பாலிகான் முதலாம் ஆண்டு மாணவிகளின் கருத்தரங்கம் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகாமையில் உள்ள ஏம்பக்கோட்டை ரஹீமா பரக்கத் தீனியாத் மக்தப் மதரஸாவில் பயிலும் பாலிகான் முதலாம் ஆண்டு மாணவிகளின் கருத்தரங்கம் நேற்று 27.12.2020 ஞாயிற்றுக்கிழமை அஸர் தொழுகைக்கு பிறகு நடைபெற்றது.

இக்கருத்தரங்கில் 

இக்காலத்து பிள்ளைகள் சீரழிவிற்கு பெரிதும் காரணம்?

தீய நட்பினாலா?

அல்லது

பெற்றோரின் அலட்சியைப்போக்கினாலா?

அல்லது

அடிப்படை மார்க்க கல்வியை கற்காமல் போனதின் விளைவினாலா?

அல்லது

மொபைல் போன்  பயன்படுத்துவதினாலா?

என்ற தலைப்பில் மௌலவி,பாஜில் ,காரி J. முகமது மைதீன் தாவூதி அவர்கள் நடுவராக பங்கேற்று, அனைத்து மாணவ மாணவிகளின் பெற்றோர்களின் முன்னிலையில்,N .சோபியா D/O K.நிஜாமுகைதீன் கிராஅத் ஓதி, காலை வகுப்பு மாணவிகள் இறைபுகழ் பாடி நிகழ்ச்சி துவங்கியது.

தீய நட்பே என்ற தலைப்பில்
1.ஜஹானா ஜாஸ்மின் D/O A.முகமது ஜுனைது மற்றும் 2.தாஹிரா பானு
D/O A.அன்வர் ஹுஸைன்

பெற்றோரின் அலட்சியை போக்கே என்ற தலைப்பில் 1.M. பர்ஷித் W/O I. முகமது ரிஸ்வான்

மார்க்க கல்வி கற்காமல் போனதே என்ற தலைப்பில் 1.M. சமீமா D/O K. முஹம்மது பாட்ஷா மற்றும் 2.M. சமீரா D/O A.முகமது அலி ஜின்னா

மொபைல் போனின் பயன்பாடே என்ற தலைப்பில் 1.M. சப்ரின்
D/O A. ,முஹம்மது அலி ஜின்னா மற்றும் 2.S. பாத்திமா முனவ்வரா D/O N. சேகு நூர்தீன் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.

இறுதியாக மௌலவி Y. முஜாஹித் முனீரி அவர்கள் நன்றி உரையாற்றினார்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments