இங்கிலாந்தில் பரவி வரும் புதிய கரோனா வைரஸ் அச்சத்தால் பல்வேறு ஐரோப்பிய நாடுகளும் அந்த நாட்டிற்கான விமானப் போக்குவரத்தை நிறுத்திவிட்டன. புதிய வைரஸ் கட்டுப்பாட்டை மீறி இருப்பதால், மக்கள் வீட்டுக்குள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என இங்கிலாந்து அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து சவுதி அரேபியாவும், தங்கள் நாட்டின் சர்வதேச விமானப் போக்குவரத்துக்கு ஒரு வாரத்துக்குத் தடை விதித்தன. அதுமட்டுமல்லாமல் ஐரோப்பிய நாடுகளில் இருந்து சவுதி அரேபியாவுக்கு சமீபத்தில் வந்தவர்கள், புதிய கரோனா வைரஸ் பரவிய நாடுகளில் இருந்து வந்த மக்கள் அனைவரும் கண்டிப்பாக இரு வாரங்கள் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று சவுதி அரேபிய அரசு அறிவுறுத்தி இருந்தது.
கடந்த 3 மாதங்களுக்கு முன் ஐரோப்பிய நாடுகளில் இருந்து வந்தவர்கள் மீண்டும் ஒருமுறை கொரோனா வைரஸ் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று சவுதி அரேபிய அரசு கேட்டுக்கொண்டது. தரைவழி எல்லையையும் மூட சவுதி அரேபிய அரசு உத்தரவிட்டது.
இந்நிலையில் இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய கொரோனா வைரசின் பரவலை கருத்தில் கொண்டு அனைத்து சர்வதேச வர்த்தக விமானங்களுக்கும் விதிக்கப்பட்ட தற்காலிக தடையை சவுதி அரேபியா அரசு மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டித்துள்ளது. மேலும் தரைவழியாகவும், துறைமுகங்கள் வழியாகவும் நுழைவதையும் சவுதி அரேபியா அரசு நீட்டித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments