காரங்காடு சதுப்பு நிலக்காடுகள் சூழல்சுற்றுலா மையத்தை திறக்க வலியுறுத்தல்




ராமநாதபுரம் : தொண்டி அருகேயுள்ள காரங்காடு சதுப்புநிலக் காடுகளின் சொர்க்க பூமி, சுழல் சுற்றுலா மையத்தை சுற்றிப்பார்க்க அரசு அனுமதி வழங்கவேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.


ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே உள்ள காரங்காடு பகுதியில் இயற்கை எழில் கொஞ்சும் சதுப்புநில அலையாத்தி காடுகள் அமைந்துள்ளன. இப்பகுதியில் கடல்பசு, கடல்குதிரை, கடல்பாசி உள்ளிட்ட கடல்சார் வன உயிரினங்கள் வாழ்கின்றன.ராமநாதபுரம் மன்னார் வளைகுடா கடல்வாழ் உயிரின காப்பகம் சார்பில், சுற்றுலா பயணிகளை கவர்ந்திடும் நோக்கில் வனத்துறை ஒருங்கிணைப்போடு காரங்காடு சூழல் மேம்பாட்டுக் குழு அமைக்கப்பட்டு பல்வேறு சுற்றுலா மேம்பாட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன.

குறிப்பாக சதுப்புநிலக்காட்டின் அழகை ரசிக்கும் வகையில் 3 கி.மீ. துாரம் படகு சவாரி கயாக்கின் எனப்படும் துடுப்பு படகு சவாரி ஸ்நார்கிங் எனப்படும் தண்ணீருக்கு அடியிலுள்ள உயிரினங்களை கண்டுகளிப்பது போன்ற பொழுதுபோக்கு அம்சங்கள் ஏற்படுத்தப்பட்டுஉள்ளன. படகு சவாரி செய்வோருக்கு பாதுகாப்பு நடவடிக்கையாக உயிர் காக்கும் மிதவை வழங்கப்படுகின்றது. சிறப்பு மிக்க சுற்றுலா தலம் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளின் காரணமாக கடந்த 9 மாதத்திற்கும் மேலாக சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை. தற்போது கொரோனா பரவல் குறைந்து தனுஷ்கோடி, ராமேஸ்வரம் சுற்றுலா பயணிகள் வந்துசெல்கின்றனர். அவர்கள் காரங்காடு செல்ல முடியாமல் ஏமாற்றமடைகின்றனர். ஆகையால் காரங்காடு சுற்றுலா மையத்தை திறக்க மாவட்ட நிர்வாகம், வனத்துறையும் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments