புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் அலுவலகம் திறக்கப்பட்டது.



              

 
புதுக்கோட்டை மாவட்டத்திலேயே இரண்டாவது பெரிய நகராட்சியான அறந்தாங்கி நகராட்சியை உள்ளடக்கிய அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி கடந்த காலத்தில் புதுக்கோட்டை பாராளுமன்ற தொகுதி ஆக இருந்து வந்த நிலையில் தொகுதி சீரமைப்பின் காரணமாக தற்போது இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி சேர்க்கப்பட்டது.

நடந்து முடிந்த பாராளுமன்றம் தேர்தலில் இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் திமுக கூட்டனி சார்பில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளராக நவாஸ் கனி  போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர் தன் தேர்தல் பிரச்சாரத்தின் போது,  வெற்றி பெற்றால் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியை சேர்ந்த மக்கள் தங்களுடைய கோரிக்கைகளை தெரிவிக்க இராமநாதபுரம் அலுவலகத்திற்கு வரவேண்டியதில்லை. அறந்தாங்கி சட்டமன்றத்திற்கு என தனியாக ஒரு பாராளுமன்றம் உறுப்பினர் அலுவலகம் அமைக்கப்படும் என வாக்குறுதி அளிந்திருந்தார்.

அதன்படி அறந்தாங்கி பேருந்து நிலையம் அருகில் எம்.எம்.வணிக வளாகத்தில் பாராளுமன்றம் உறுப்பினர் அலுவலகம் எம்.பி. நவாஸ்கனி தலைமையில் புதுக்கோட்டை  முஸ்லீம் லீக் மாவட்டம் தலைவர் அஸ்ஷர் அலி மற்றும் மாவட்டதுணை தலைவர் முகம்மது மைதீன் ஆகியோர் முன்னிலையில் புதுக்கோட்டை தெற்கு மாவட்ட செயலாளரும் திருமயம் திமுக சட்டமன்ற உறுப்பினருமான ரகுபதி மக்கள் பயன்பாட்டுக்கு அலுவலகத்தை திறந்து வைத்தார். 

இந்நிகழ்வில் அறந்தாங்கி முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினர் உதயம்சண்முகம். தலைமை பொதுக்குழு உறுப்பினர் RRK.கலைமணி, அறந்தாங்கி நகர செயலாளர் ஆனந்த், மாநில கழக பேச்சாளர் வழக்கறிஞர் வெங்கடேசன், மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் தி.முத்து, மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் தி.முத்து மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் வரதராஜன்,  சிறுபான்மை அணி அமைப்பாளர் நசுருதீன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் கலைசரவணன், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர்கள் துளசிராமன், ஆறுமுகம், சக்தி உள்ளிட்ட திமுக பிரதிகளும்

முஸ்லிம் லீக் நிர்வாகிகள் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் ஜின்னா, நகர தலைவர் செய்யது முகம்மது. நகர செயலாளர் ஜபருல்லாஹ், நகர பொருளாளர் முகம்மது உசேன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலரும் இராமநாதபுரம்  பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் அலுவலக திறப்பு விழாவில் பங்கேற்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments