ஆர்எஸ் மங்கலத்தில் நடைபெற்ற அமைதியை நோக்கி வாழ்வியல் கண்காட்சியில் பங்கேற்று துவங்கி வைத்தேன்

இராமநாதபுரம் மாவட்டம், ஆர்எஸ் மங்கலத்தில் நடைபெற்ற அமைதியை நோக்கி வாழ்வியல் கண்காட்சியில் பங்கேற்று துவங்கி வைத்தேன்.

இராமநாதபுரம் மாவட்டம், இளையான்குடி சமூகநீதிப் பேரவை மற்றும் ஆர்எஸ் மங்கலம் ஜமாத்தார்கள் இணைந்து நடத்திய அமைதியை நோக்கி வாழ்வியல் கண்காட்சியில் பங்கேற்று கண்காட்சியை துவங்கி வைத்தேன். சமூக நல்லிணக்கத்தை பிரதிபலிக்கும் இது போன்ற நிகழ்வுகள் ஒற்றுமைக்கும், அமைதிக்கும், சகோதரத்துவத்திற்க்கும் உறுதுணையாக இருக்கும்.
சிறந்த முன்னெடுப்பை மேற்கொண்ட நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு நல்வாழ்த்துக்கள்.
இந்நிகழ்வில் தி.மு.க மாநில விவசாய அணி துணை செயலாளர் திரு. நல்ல சேதுபதி, திருவாடனை தொகுதி தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் திரு. கண்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
--
கே நவாஸ்கனி,
இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர்,
மாநில துணைத் தலைவர் - இந்திய யூனியன் முஸ்லிம் லீக்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments