தமிழகத்தில் இரண்டு கட்டமாக தேர்தல் நடத்த முடிவு : தேர்தல் ஆணையம் தகவல்
தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை இரண்டு கட்டமாக நடத்த தேர்தல் ஆணையம் முடிவு எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தமிழகம், புதுவை, அசாம் உள்ளிட்ட 5 மாநிலங்களின் சட்டசபை காலம் வரும் மே மாதத்துடன் முடிவடைய உள்ளது. இதையடுத்து 5 மாநிலங்களில் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் தீவிர பணிகளை மேற்கொண்டு வருகிறது,

குறிப்பாக அந்தந்த மாநிலங்களின் பண்டிகை தேதி மற்றும் பள்ளிகள் இயங்கும் நாட்களுக்கு ஏற்றவாறு தேர்தல் தேதிகளை வரையறுத்து வருகின்றனர். கடந்த முறை தமிழகம் மற்றும் புதுவையில் ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது.தற்போது கொரோனா அச்சம் காரணமாக தமிழகத்தில் 2 கட்டமாக நடத்த தேர்தல் ஆணையம் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்கான இறுதிகட்ட ஆலோசனை நடைபெற்று வருவதாகவும், மாநில தலைமை தேர்தல் அதிகாரி மற்றும் அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments