நெருக்கடி காலங்களில் உதவும் வகையில் வெளிநாட்டவர்களுக்கான புதிய ‘செயலி’ அறிமுகம்




உலகில் வசிக்கும் வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்காக மத்திய வெளியுறவுத்துறை சார்பில் ‘குளோபல் பிரவாசி ரிஷ்தா’ என்ற பெயரில் புதிய ‘செயலி’ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ‘செயலி’யை மத்திய வெளியுறவு இணை மந்திரி முரளீதரன் நேற்று வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது:-


இந்திய அரசு வெளிநாடு வாழ் இந்தியர்களின் நலனை கவனத்தில் கொண்டு அவர்களுக்கு தேவையான சேவைகளை அளிக்க தகவல் தொடர்பு தளமாக இந்த ‘செயலி’ இருக்கும். இதன் மூலம் முக்கிய அறிவிப்புகள், அவசரகால நடவடிக்கைகள் மற்றும் அறிவுரைகள் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு அவ்வப்போது அளிக்கப்படும்.

குறிப்பாக நெருக்கடி காலங்களில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவளியினருக்கு உதவும் வகையில் இந்த ‘செயலி’ செயல்படும். வளைகுடா நாடுகளில் வசிப்பவர்கள் http://pravasirishta.gov.in/ என்ற இணையதள முகவரியில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் பதிவிறக்கம் செய்து கொண்டு அவர் வசிக்கும் நாட்டை குறிப்பிட வேண்டும்.

உலகம் முழுவதும் உள்ள வெளிநாடு வாழ் இந்தியர்களை இணைக்க இதுவரை எந்த தளமும் இல்லை. அதற்கான முயற்சியாக இந்த குளோபல் பிரவாசி ரிஷ்தா என்ற ‘செயலி’ உருவாக்கப்பட்டுள்ளது. மத்திய வெளியுறவுத்துறை, இந்திய தூதரக அலுவலகங்கள் மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஆகியோரை இணைக்கும் 3 வழி தொடர்பாக இந்த ‘செயலி’ இருக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments