கோபாலப்பட்டிணம் அவுலியா நகர் வீதிகளில் சாலை வசதி மற்றும் கழிவுநீர் வாய்க்கால் திட்டத்தை விரைவில் நிறைவேற்ற கோரி SDPI கட்சி சார்பாக புதுக்கோட்டை துணை ஆட்சியரிடம் மனு.!!



கோபாலப்பட்டிணம் அவுலியா நகர் வீதிகளில் சாலை வசதி மற்றும் கழிவுநீர் வாய்க்கால் திட்டத்தை விரைவில் நிறைவேற்ற கோரி SDPI கட்சி சார்பாக புதுக்கோட்டை துணை ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் ஒன்றியம், நாட்டடாணிபுரசக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட கோபாலப்பட்டினம் அவுலியா நகர் பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.இப்பகுதியில் உள்ள வீடுகள் தாழ்வாக இருப்பதாலும், சரியான கழிவுநீர் வாய்க்கால் வசதி இல்லாத காரணத்தினாலும், இங்கு உள்ள சாலைகள் புதுப்பிக்கப்படாத காரணத்தினாலும், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் மற்றும் மழைக் காலங்களில் ஏற்படும் உபரியான தண்ணீர் அந்த பகுதியில் சாக்கடை போல தேங்கி நின்று சுகாதாரக் கேடுகள் ஏற்படுகின்றன.

இது சம்பந்தமாக அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை அணுகி தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருமாறு கோரிக்கைகள் வைத்திருந்தனர். கடந்த வருடம் இது சம்பந்தமாக மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அதை தொடர்ந்து அங்கு வந்த ஊரக வளர்ச்சி அலுவலர் மற்றும் அதிகாரிகள் அப்பகுதியை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்திருந்தனர். அதன் அடிப்படையில் ரூபாய் ஒரு கோடியே இருபத்தி ஏழு லட்சத்து ஐந்து ஆயிரம் (1,27,05000)-க்கு திட்ட அறிக்கையும் தயார் செய்யப்பட்டு ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. ஆனால் உள்ளாட்சி தேர்தல் வந்ததால் அந்த நேரத்தில், அந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது. 
 

இதனை தொடர்ந்து எஸ்டிபிஐ கட்சியினர் அவுலியா நகர் பகுதி மக்களின் ஒத்துழைப்புடன் கடந்த நவம்பர் மாதம் போராட்டம் ஒன்றை நடத்தினார்கள். கடந்த நிவர் புயலின் போது, புயல் பாதிப்பு உள்ள பகுதிகளை புதுக்கோட்டை துணை ஆட்சியர் ஆய்வு செய்ய வந்த பொழுது அவுலியா நகர் பகுதியை ஆய்வு செய்ய வருமாறு SDPI கட்சியினர் துணை ஆட்சியருக்கு அழைப்பு விடுத்தனர். இதனையடுத்து எஸ்டிபிஐ கட்சியினரின் அழைப்பை ஏற்று அப்பகுதியில் ஆய்வு செய்த துணை ஆட்சியர் அவர்கள், உரிய நடவடிக்கை எடுப்பதாகவும், மழை நின்ற பிறகு நேரில் வந்து சந்திக்க சொல்லியும் அழைப்பு விடுத்து சென்றார்கள்.
 
அதனடிப்படையில் நேற்று 04-01-2021 திங்கள்கிழமை எஸ்டிபிஐ கட்சியின் புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட பொதுச்செயலாளர் ஹனீபா அவர்களின் தலைமையில், மீமிசல் நகர செயலாளர் அன்வர் மற்றும் மீமிசல் நகர துணைத் தலைவர் யாசின் மற்றும் கோபாலப்பட்டிணம் கிளைத் தலைவர் சேக் பரீது மற்றும் நிர்வாகிகள் புதுக்கோட்டை துணை ஆட்சியரை சந்தித்து அவுலியா நகர் பகுதியில் சாலை மற்றும் கழிவு நீர் வாய்க்கால் வசதி திட்டத்தை உடனடியாக போர்க்கால அடிப்படையில் நிறைவேற்றி தருமாறு கோரிக்கை விடுத்தனர்.
        
எஸ்டிபிஐ கட்சியினரின் கோரிக்கையை செவிதாழ்த்திக் கேட்ட மாவட்ட துணை ஆட்சியர், தனது உதவியாளரை அழைத்து ஏற்கனவே தயார் செய்யப்பட்ட திட்ட அறிக்கை சம்பந்தமான தற்போதைய நிலை பற்றி ஆய்வு செய்து, சிறப்பு அவசர கால திட்டமாக (Special Case) உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதுடன், இந்தத் திட்டத்தை உடனடியாக நிறைவேற்றி தருவதாக உறுதி அளித்தார்கள்.

தகவல்:
சேக் பரீது
கோபாலபட்டிணம் கிளைத் தலைவர்,
எஸ்டிபிஐ கட்சி,
புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments