கோபாலப்பட்டிணத்தில் இயங்கி வரும் GPM பைத்துல்மால் கோபாலப்பட்டிணம் மக்களுக்கு பல்வேறு விதமான உதவிகளை செய்து வருகின்றது.
இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா நாட்டானி புரசக்குடி ஊராட்சி மீமிசல் அருகே உள்ள கடற்கரை கிராமமான கோபாலப்பட்டிணத்தில்
பெண்கள் சுய தொழிலை கற்றுக் கொள்ளும் நோக்கில் பெண்களுக்கு தையல் பயிற்சி அளிக்க GPM பைத்துல்மால் நேற்று 12.01.2021 செவ்வாய் கிழமை கோபாலப்பட்டிணம் சின்ன பள்ளிவாசல் அருகில் உள்ள பாப்புலர் ஆரம்ப பள்ளியில் வகுப்புகள் ஆரம்ப விழா நடைப்பெற்றது.
இவ்விழாவில் கோபாலப்பட்டிணம்
பைத்துல்மாலின் கெளரவ தலைவர் பெண்களுக்கான தையல் பயிற்சி பயிலகத்தை திறந்து வைத்தார்.
பைத்துல்மால் உறுப்பினர்கள், மற்றும் தற்காலிக ஜமாத் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
இந்த மகத்தான நல்ல முயற்சியை GPM பைத்துல்மாலுக்கு GPM MEDIA சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.
தகவல் :
GPM பைத்துல்மால் கோபாலப்பட்டிணம்.
புதுக்கோட்டை மாவட்டம்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments