கோபாலப்பட்டிணத்தில் தொடர் மழை
மழையால் காட்டுக்குளம் 4 ரோடு சந்திப்பு - பழைய காலணி சாலை மூழ்கியது
பொதுமக்கள் அவதி
கோபாலப்பட்டிணத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது
புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் ஒன்றியம், நாட்டாணிபுரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட கோபாலப்பட்டிணத்தில் மழை வெள்ளத்தால் காட்டுக்குளம் 4 ரோடு சந்திப்பு - பழைய காலணி சாலை பாலம் மழை நீரில் மூழ்கியது
பொதுமக்களின் போக்குவரத்துக்கு பிரதான இந்த சாலையாக திகழ்ந்து வருகிறது.
மேலும் மீமிசல் கடைவீதி மற்றும் கோபாலப்பட்டிணம் ஊருக்குள் செல்ல முக்கிய
சாலையாக திகழ்ந்து வருகிறது.
இந்த சாலையில் அதிக அளவில் வாகனங்கள் சென்று வருவதால் அடிக்கடி இந்த சாலை சேதமடைந்து விடுவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்தநிலையில் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழை காரணமாக காட்டுக்குளம் 4 ரோடு சந்திப்பு - பழைய காலணி சாலை மிகவும் மோசமாக சேதமடைந்துள்ளது.
எனவே அந்த பகுதியில் தாழ்வான வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது.
இதனை ஊராட்சி நிர்வாகம் உடனடியாக தற்காலிகமாக கால்வாய்களை அமைப்பதோடு மேலும் நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று பொதுமக்கள் கேட்டுக் கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments