கோபாலப்பட்டிணத்தில் நாளை (ஜன.15) ஜூம்ஆ-விற்கு பிறகு புதிய நிர்வாகம் அறிவிப்பு.! பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ள தற்காலிக நிர்வாகம் வேண்டுகோள்.!!



கோபாலப்பட்டிணத்தில் நாளை (15.01.2021) வெள்ளிக்கிழமை ஜூம்ஆ-விற்கு பிறகு புதிய நிர்வாகம் அறிவிக்கப்பட உள்ளது. பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ள தற்காலிக நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் கோபாலப்பட்டிணத்தில் நாளை வெள்ளிக்கிழமை ஜூம்ஆ-விற்கு பிறகு நிர்வாகம் அறிவிக்கப்பட உள்ளது. ஆகவே ஊர் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு ஊரின் ஒற்றுமைக்கு ஒத்துழைப்பு தருமாறு தற்காலிக நிர்வாகத்தினர் சார்பாக அன்போடு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தகவல்: தற்காலிக ஜமாத் நிர்வாகம்

ஓற்றுமை பற்றி இஸ்லாம்:

“ இன்னும் நீங்கள் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாகப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள்; அல்லாஹ் உங்களுக்கு கொடுத்த அருட்கொடைகளை நினைத்துப் பாருங்கள்; நீங்கள் பகைவர்களாய் இருந்தீர்கள்- உங்கள் இதயங்களை அன்பினால் பிணைத்து; அருளால் நீங்கள் சகோதரர்களாய் ஆகிவிட்டீர்கள்; இன்னும், நீங்கள் நரக நெருப்புக் குழியின் விளிம்பின் மீது இருந்தீர்கள்; அதனின்றும் அவன் உங்களைக் காப்பாற்றினான்-  நீங்கள் நேர் வழி பெறும் பொருட்டு அல்லாஹ் இவ்வாறு தன் வசனங்களை உங்களுக்கு தெளிவாக்குகிறான்.” அல் குர்ஆன்.3:103.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

'எனக்குப் பின்னால் உங்களில் ஒருவர் மற்றொருவரின் பிடரியை வெட்டிக்கொள்ளும் இறைமறுப்பாளர்களாக மாறிவிடாதீர்கள் (ஒற்றுமையுடன் இருங்கள்)' என்றார்கள். ஸஹீஹ் புகாரி : 6869.

நீதியும் நிர்வாகமும்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' 
நினைவில் கொள்க! நீங்கள் ஒவ்வொரு வரும் பொறுப்பாளியே. உங்களில் ஒவ்வொருவரும் தத்தம் பொறுப்பிலுள்ளவை பற்றி (மறுமையில்) விசாரிக்கப்படுவீர்கள். ஆட்சித் தலைவர் மக்களின் பொறுப்பாளராவார். அவர் தம் குடிமக்கள் குறித்து விசாரிக்கப்படுவார்.  ஸஹீஹ் புகாரி : 7138.|

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' 
அல்லாஹ் தன்னுடைய (அரியணையின்) நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத மறுமை நாளில் தன்னுடைய நிழலில் ஏழு பேருக்கு நிழல் அளிப்பான்: 

1. நீதிமிக்க ஆட்சியாளர். 
2. இறை வணக்கத்திலேயே வளர்ந்த இளைஞன். 
3. தனிமையில் அல்லாஹ்வை நினைத்து (அவனுடைய அச்சத்தில்) கண்ணீர் சிந்திய மனிதன். 
4. பள்ளிவாசலுடன் (எப்போதும்) தொடர்பு வைத்துக்கொள்ளும் இதயமுடையவர். 
5. இறைவழியில் நட்புகொண்ட இருவர். 
6. அந்தஸ்தும் அழகும் உடைய ஒரு பெண் தம்மை தவறு செய்ய அழைத்தபோது 'நான் அல்லாஹ்வுக்கு அஞ்சுகிறேன்' என்று கூறியவர். 
7. தம் இடக் கரம் செய்த தர்மத்தை வலக் கரம் கூட அறியாத வகையில் இரகசியமாக தர்மம் செய்தவர். 
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 24. ஸஹீஹ் புகாரி : 6806. 

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments