மழை பாதிப்பு: 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை திறப்பு
புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடா் மழை பாதிப்புகள் குறித்து பொதுமக்கள் தகவல் அளிப்பதற்கான 24 மணி நேரக் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் பி. உமா மகேஸ்வரி கூறியது: மழை நிலவரங்களை ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை வேளாண்மைத் துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட அனைத்துத் துறையினரையும் ஒருங்கிணைத்து அறிக்கைகள் பெறப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் மழை பாதிப்புகள் குறித்த தகவல்களைத் தெரிவிக்கவும் உதவிகளைப் பெறவும், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள 24 மணி நேரக் கட்டுப்பாட்டு அறை எண் 04322 222207, 1077 ஆகியவற்றைத் தொடா்பு கொள்ளலாம்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments