26-ந் தேதி குடியரசு தின விழா: புதுக்கோட்டையில் ஆயுதப்படை மைதானம் சீரமைப்பு




குடியரசு தின விழா
நாட்டில் வருகிற 26-ந் தேதி குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகளை போலீசார் மேற்கொண்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் குடியரசு தின விழா கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகள் தொடங்கி உள்ளன.


புதுக்கோட்டையில் ஆயுதப்படை மைதானத்தில்குடியரசு தின விழா கொண்டாடப்படுவது வழக்கம். இதற்காக அந்த மைதானம் தற்போது சீரமைக்கப்பட்டு தயராகி கொண்டிருக்கிறது. மைதானத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சாக்கடை குழாய் சீரமைப்புக்காக குழி தோண்டப்பட்டது. அதனை பொக்லைன் மூலம் சரி செய்யும் பணி நடந்து வருகிறது. குடியரசு தினவிழாவில் கலெக்டர் தேசிய கொடி ஏற்றும் இடம் அருகே இந்த பணி நேற்று நடைபெற்றது.

கலைநிகழ்ச்சிகள் கிடையாது
கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக கடந்த ஆகஸ்டு மாதம் 15-ந் தேதி சுதந்திர தின விழா கொண்டாட்டத்திற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. கலைநிகழ்ச்சிகள் எதுவும் நடைபெறாமல் கொடியேற்றம் நிகழ்ச்சி மற்றும் அரசு ஊழியர்கள், சுகாதார பணியாளர்களை பாராட்டி நற்சான்றிதழ்கள் மட்டும் வழங்கப்பட்டன.

அதேபோல தற்போது குடியரசு தின விழாவிலும் கலைநிகழ்ச்சிகள் எதுவும் நடைபெற வாய்ப்பு இல்லை என அரசுத்துறை வட்டாரத்தில் தெரிவித்தனர்.

குடியரசு தின விழா கொண்டாட்டத்திற்கான வழிமுறைகளை அரசு அறிவிக்கும் என கூறப்படுகிறது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக முககவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் உள்ளிட்டவை இருக்கும். போலீசாரின் அணிவகுப்பு மரியாதை நடைபெறும் என போலீஸ் வட்டாரத்தில் தெரிவித்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments