ஸ்ட்ரீட் வியூ லொக்கேஷனை பப்ளிக் ஆக்கும் கூகுள் - உங்கள் வீட்டை மட்டும் ப்ளர் செய்யலாம் !




புதிய இடங்களுக்கு செல்பவர்கள் மற்றும் Ola, Uber போன்ற கேப்களை ஓட்டுபவர்கள் என பலருக்கும் பெரும் உதவியாக இருப்பது Google Map. தற்போது அதன் ஸ்ட்ரீட் வியூ மேப்பை பலரும் பயன்படுத்தி வருகிறார்கள். மேலும் சரியான இடத்தை சென்று சேர்வதற்கு வர்த்த நிறுவனங்களுக்கு பெரும் உதவி செய்கிறது. ஆன்லைன் பிரைவசிக்கான முக்கியத்துவம் அதிகரிக்கும்போது உங்களின் சில முக்கியமான தரவைப் பாதுகாக்க உதவும் பல்வேறு லூப்ஹோல்களும் பிளாட்பார்ம்களும் உருவாகின்றன. கூகுள் மேப்ஸ்கள்நாவிகேஷன் கேமில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது உங்கள் ஹவுஸ் லொகேஷனை அதன் ஸ்ட்ரீட் வியூ  அம்சத்துடன் யார்வேண்டுமென்றாலும் பார்க்கும்படி செய்துள்ளது. 

ஆப்ஸில் குறிப்பிட்ட அம்சத்தை ஏற்றுக்கொள்ளாத நபர்களையும் கூகுள் ஸ்ட்ரீட் வியூ கைப்பற்றி உள்ளது. அச்சுறுத்தலால் பாதிப்பு ஏற்படும் என்று உணரும் பெண்களைப் பின்தொடர்வதில் இந்த ஆப்ஸ் உதவியுள்ளது. இருப்பினும், உங்கள் ஹவுஸ் லொகேஷனை கூகுளில் யாருக்கும் வெளிப்படையாகத் தெரியாமல் பாதுகாக்க ஒரு வழி உள்ளது. 

அதாவது கூகுள் ஸ்ட்ரீட் வியூவில் பலருக்கும் தெரியும் உங்கள் வீட்டை எவ்வாறு ப்ளர் ஆக்குவது  என்பதை Mashable இன் சமீபத்திய அறிக்கை காட்டுகிறது. இந்த நடைமுறையை பின்பற்றுவதற்கு முன் நீங்கள் மனதில் ஒருமுறைக்கு பலமுறை யோசிக்க வேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால், கூகுள் ஸ்ட்ரீட் வியூவில் ஒரு இடத்தை நீங்கள் மழுங்கடித்தால்/ ப்ளர் செய்துவிட்டால், அதை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவர முடியாது.



 

Google மேப்ஸில் உங்கள் வீட்டின் விசிபிலிட்டியை மறைக்க, நீங்கள் பின்பற்றவேண்டிய வழிகள் :

1. Google Maps இல் உங்கள் வீட்டு முகவரியை உள்ளிடவும்.2. திரையின் வலது கீழ் மூலையில் ஒரு சிறிய மஞ்சள் மனித வடிவ ஐகானை உங்கள் வீட்டின் முன் வரைபடத்தில் இழுப்பதன் மூலம் ஸ்ட்ரீட் வியூ மோடிற்கு மாறவும்.

3.வியூவில் உங்கள் வீட்டை நீங்கள் அடையாளம் காணும்போது, திரையின் கீழ்-வலது மூலையில் கிடைக்கும் "சிக்கலைப் புகாரளி" விருப்பத்தை கிளிக் செய்யவும்.

4.உங்கள் வீட்டை சிவப்பு பெட்டியின் மையத்தில் வைத்து, "ப்ளர் செய்வதற்கான வேண்டுகோள்"என்ற பீல்டில் "எனது வீடு"  என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

5.படத்தை ஏன் மங்கலாக்க/ ப்ளர் செய்ய, வேண்டும் என்று Google உங்களிடம் கேட்கும், அதற்கு உங்கள் பதிலை நீங்கள் டைப் செய்யலாம், அதில் நீங்கள் கருதும் பாதுகாப்பு கருத்துக்களை குறிப்பிடலாம்.

6.இந்த வினவலை நிறைவு செய்த பிறகு, உங்கள் இமெயில் முகவரியை உள்ளிட்டு பதிலைச் சமர்ப்பிக்கவும்.

கூகுள் ஸ்ட்ரீட் வியூவில் உங்கள் வீட்டை மற்றவர்கள் காணாதபடி மறைக்கும் செயல்முறையை நீங்கள் முடிக்கும்போது, நீங்கள் புகாரளித்த படத்தை ரிவியூ செய்வதாகவும், உங்கள் கோரிக்கை தீர்க்கப்படும்போது உங்களுக்கு இமெயில் அனுப்புவதாகவும் கூகுளிலிருந்து ஒரு இமெயிலை நீங்கள் பெறுவீர்கள். 

Google இமெயில் வழியாகவும் பின்தொடரலாம், மேலும் அவர்களின் சாப்ட்வேர்களில் நீங்கள் ப்ளர் செய்ய விரும்பும் பகுதியைப் பற்றி மேலும் விவரமாகக் கேட்கலாம். அதுபோன்றதொரு நிலையில், நீங்கள் முழு செயல்முறையையும் மீண்டும் ஒரு முறை பின்பற்ற வேண்டும் மற்றும் நீங்கள் ப்ளர் செய்ய விரும்பும் படத்தின் சரியான பகுதியில் விவரங்களை தெளிவாக முன்வைக்க வேண்டும் என்று Mashable கூறுகிறது. கூகுள் அதன் ஸ்ட்ரீட் வியூ சாப்ட்வேரை 2007 இல் அறிமுகப்படுத்தியது, அங்கு ஒரு நபர் ஒரு குறிப்பிட்ட லொக்கேஷனை ஸ்ட்ரீட் வியூவில் பார்க்கும்போது அவரால் உங்கள் வீட்டையும் பார்க்க முடியும்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments