மதுரையில் சமூக நல்லிணக்கத்தை குழைக்க நினைக்கும் தீய சக்திகள் மீது நடவடிக்கை எடுக்க SDPI, PFI, TMMK, TNTJ, VCK, ஜமாத்தினர் மற்றும் பல்வேறு கட்சிகள் ஆர்ப்பாட்டம்..
மதுரை திருப்பாலை பள்ளிவாசலில் செருப்பு கற்களை வீசி தாக்குதல் நடத்திய பா.ஜ.க வினரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், 
விசாரணை என்ற பெயரில் தலித் மற்றும் இஸ்லாமியர் இளைஞர்களை கைது செய்து துன்புறுத்துவதை கண்டித்தும் ஜமாஅத்துல் உலமா சபை,அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகள் நடத்திய மாபெரும் மக்கள் திரள் கண்டன ஆர்ப்பாட்டம் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முஜிபுர் ரஹ்மான் தலைமையில் க்ரைம் ப்ராஞ்ச் பகுதியில் நடைபெற்றது.

திருப்பாலை பள்ளி ஜமாஅத் நிர்வாகிகள் மற்றும் இயக்கங்கள் அரசியல் கட்சிகளின் மாநில மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் விஜயராஜன், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் வழக்கறிஞர் ஆசைத்தம்பி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் இளைஞர் பாசறை துணைச்செயலாளர் மாலின், விமன் இந்தியா மூவ்மெண்ட் மாநிலச் செயலாளர் பாத்திமா கனி,பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாவட்ட செயலாளர் காஜா மைதீன், இந்திய தேசிய லீக் கட்சியின் மாநில பேச்சாளர் தௌபிக் அலி, இந்திய காங்கிரஸ் கமிட்டியின் மதுரை மாவட்ட செயலாளர் பால்ராஜ், ஏகத்துவ முஸ்லிம் ஜமாத் மாவட்ட தலைவர் முஹம்மது அலி, மனிதநேய மக்கள் முன்னேற்ற கழகம் மாவட்ட துணைத்தலைவர் இதயத்துல்லா, வஹ்ததே இஸ்லாமிய ஹிந்த் பிரதிநிதி உஸ்மான்,இந்திய தவ்ஹீத் ஜமாத் மாவட்ட தலைவர் சாகுல் ஹமீது, மக்கள் ஜனநாயக கட்சியின் நிர்வாகி இஸ்மாயில், மஜ்லிஸ் கட்சியின் மாவட்ட தலைவர் தாஜுதீன் ஆகியோர் கலந்துகொண்டு கண்டன உரை நிகழ்த்தினர்.இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் அனைத்து இயக்கங்கள் கட்சிகளின்நிர்வாகிகள் செயல்வீரர்கள் உறுப்பினர்கள் ஜமாத்தார்கள் பொதுமக்கள் என 3000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டனங்களை பதிவு செய்தனர்.

நிகழ்ச்சியின் நிறைவாக ஒருங்கிணைந்த மக்கள் கழகத்தின் மாநில பொதுச் செயலாளர் பிலால்தீன் நன்றி கூறினார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments