தொடரும் இலங்கை கடற்படையின் அத்துமீறல்களை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் விரைந்து செயல்பட வேண்டும். கே.நவாஸ்கனிதொடரும் இலங்கை கடற்படையின் அத்துமீறல்களை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் விரைந்து செயல்பட வேண்டும்.
--
இராமநாதபுரம் மாவட்டம், கோட்டைப் பட்டினத்தைச் சேர்ந்த தமிழக மீனவர்கள் மேசியா, நாகராஜ், சாம், செந்தில்குமார் ஆகியோர் கச்சத்தீவு பகுதியில் இலங்கை கடற்படையினரின் படகுகள் மோதி விசைப்படகுகளுடன் மூழ்கடிக்க பட்டிருக்கிறார்கள்.

நால்வரும் சடலமாக மீட்கப்பட்டிருக்கிறார்கள்.

இதுபோன்று இலங்கை கடற்படையின் அத்துமீறல்கள் தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இதுகுறித்து பலமுறை மத்திய அரசையும், மாநில அரசையும் வலியுறுத்தி இருக்கிறேன்.

தொடர்ந்து இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர், வெளியுறவு துறை செயலாளர் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகளையும் சந்தித்து வலியுறுத்தியிருக்கிறேன்.


இன்னும் இதற்கான நிரந்திர தீர்வு எட்டப்படாமல் இருப்பது மத்திய, மாநில அரசுகளின் தோல்வியை பிரதிபலிக்கிறது.

உடனடியாக இத்தகைய அத்துமீறல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க மத்திய, மாநில அரசுகள் விரைந்து செயல்பட வேண்டும் என வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.

இத்தாக்குதலுக்கு இந்திய அரசு இலங்கை அரசிற்கு கண்டனம் தெரிவித்து, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் கிடைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.

இதுதொடர்பாக வரும் பாராளுமன்ற கூட்டத் தொடரிலும் வலியுறுத்த உள்ளேன்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments