கோட்டைப்பட்டினத்தில் நடைபெற்ற தமுமுக மற்றும் மமக புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட ஆலோசனை கூட்டம்.!கோட்டைப்பட்டினத்தில் தமுமுக மற்றும் மமக புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட தமுமுக மற்றும் மமக மாவட்ட ஆலோசனை கூட்டம் நேற்று 01.01.2021 கோட்டைப்பட்டினத்தில் மாலை 5.00 மணிக்கு  மாவட்ட பொறுப்பு குழு தலைவர் வழக்கறிஞர் சேக் தாவூதீன் தலைமையில் நடைபெற்றது. 

கூட்டத்திற்கு மாநில மீனவர் அணி செயலாளர் ஜெகதை செய்யது, முன்னாள் மாவட்ட தலைவர் அபுசாலிகு, மாவட்ட பொருளாளர் அஜ்மல் கான், மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் கட்டுமாவடி பைசல் அஹமது , அறந்தாங்கி முகமது ரபீக், கோட்டைப்பட்டினம் சாலிகு மணமேல்குடி தமுமுக ஒன்றிய செயலாளர் ரூபி முகம்மது ரபீக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில செயலாளர் தொண்டி சாதிக் பாட்சா கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார்.

கூட்டத்தில் கீழ்கண்ட முடிவுகள் எடுக்கபட்டது.

ஜன-12.ஆம் தேதி திருச்சியில் நடைபெறும் மத்திய மண்டல பொதுக்குழுவிற்கு கிளை முதல் மாவட்டம் வரை உள்ள மண்டல பொதுக்குழு உறுப்பினர்களை அழைத்து செல்வது.

உறுப்பினர் சேர்க்கை மற்றும் மக்கள் உரிமை சந்தா சேர்க்கையை தீவிர படுத்துவது.

என முடிவு எடுக்கப்பட்டது. கூட்டத்தில் SMI மாவட்ட செயலாளர் கலந்தர் பாட்ஷா உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments