மீமிசலில் SDPI கட்சியின் சார்பாக மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம்.!!மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி 31-12-2020 அன்று நள்ளிரவு 12 மணிக்கு SDPI கட்சி தேசம் முழுவதும் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்தினர்.

அதனடிப்படையில் புதுக்கோட்டை மாவட்டம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள மீமிசல் பேருந்து நிலையத்தில் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்திற்கு எஸ்டிபிஐ கட்சியின் நகர செயலாளர் அன்வர் தலைமை தாங்கினார். இதில் தொகுதி இணை செயலாளர் சாகுல் ஹமீது அவர்களும் நகர துணை தலைவர் யாசீன் அவர்களும் முன்னிலை வகித்தனர்.

இந்த போராட்டத்தில் இளைஞர்கள் பொதுமக்கள் கலந்துகொண்டு வேளாண் சட்டங்களுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள்.

தகவல்:
சமூக ஊடக அணி
கோபாலப்பட்டிணம், மீமிசல் கிளைகள்
அறந்தாங்கி தொகுதி
புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம்
SDPI கட்சி

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments