கோட்டைப்பட்டினம் மர்கஸூல் உவைஸிய்யா அரபிக்கல்லூரி முதலாம் ஆண்டு ஒரே நாளில் முழு குர்ஆனையும் மனனமாக ஒப்புவிக்கும் மகத்தான சாதனை நிகழ்ச்சி வருகிற ஜன.06-ஆம் தேதி நடைபெற உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி தாலுகா கோட்டைப்பட்டினம் முஹ்யித்தீன் ஆண்டகை ஜூம்ஆ பெரியபள்ளிவாசலில் எதிர்வரும் 06.01.2021 புதன்கிழமை காலை சுப்ஹுத் தொழுகையை தொடர்ந்து இரவு இஷா தொழுகை வரை ஏழு அமர்வுகளாக அரபிக்கல்லூரியில் இவ்வாண்டு ஹாபிழ் பட்டம் பெறும் மாணவர் முழு குர்ஆனையும் மனனமாக பொதுமக்கள் முன்னிலையில் ஓதி சமர்ப்பிக்க உள்ளார்.
சாதனை புரியும் மாணவர்:
அல்ஹாபிழ் ஸலாஹுத்தீன் த/பெ.காஜா உசேன், செல்வபுரம், கோயம்புத்தூர்.
அது சமயம் ஜமாஅத்தார்கள் அனைவரும் கலந்து சிறப்பித்து இறையருள் பெற்று சிறக்க அன்புடன் அழைக்கின்றோம்.
கடந்த 01.01.2021 அன்று முதல் கீழ்கண்ட வகுப்புகளுக்கு அட்மிசன் நடைபெற்று வருகிறது.
ஜூம்ரா பிரிவு
எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் குர்ஆன் ஷரீப் சரளமாக ஓத தெரிந்திருக்கவேண்டும்.
ஹிப்ழுப் பிரிவு
குர்ஆன் ஷரீஃப் தெளிவாக ஓதத் தெரிந்திருந்தால் போதுமானது.
தொடர்புக்கு: 9842161325, 8300903004, 6382503557
தகவல்:
மர்கஸூல் உவைஸிய்யா அரபிக்கல்லூரி
முஸ்லிம் ஜமாஅத் நிர்வாகிகள்
கோட்டைப்பட்டினம்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments