சிறுபான்மையினர் கோரிக்கை மனுக்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யலாம்... மாவட்ட ஆட்சியர் தகவல்.!!



இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சி, ஜெயின் மற்றும் புத்த மதத்தை சேர்ந்த மதவழி சிறுபான்மையின மக்கள் தங்கள் புகார்களை தேசிய சிறுபான்மையினர் ஆணைய இணையதளத்தில் பதிவு செய்யலாம்.

இதற்காக www.ncm.nic.in என்ற இணையதளத்தில் தகவு கடந்த ஜூன் 1-ந் தேதி முதல் உருவாக்கப்பட்டுள்ளது. சிறுபான்மையினர் வகுப்பைச் சேர்ந்தவர்கள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக இவ்விணையதளத்தில் பதிவு செய்யலாம். 

புகார்களை பதிவு செய்தபின் உருவாக்கப்பட்ட தனித்துவமான அடையாள எண் மூலம் புகார்கள் அல்லது குறைகளின் நிலையை அறிந்து கொள்ளலாம். எனவே புதுக்கோட்டை மாவட்டத்தில் வசிக்கும் சிறுபான்மையின மக்கள் மேற்கண்ட இணையதளத்தில் தங்கள் கோரிக்கைகளுக்கான மனுக்களை பதிவு செய்து பயன்பெறலாம். இந்த தகவலை கலெக்டர் உமாமகேஸ்வரி தெரிவித்துள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments