விலையில்லா சலவை பெட்டி பெற விண்ணப்பிக்கலாம்.. புதுகை மாவட்ட ஆட்சியர் தகவல்.!!பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் விலையில்லா சலவைப்பெட்டி பெற விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.பி.உமாமகேஸ்வரி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் சலவைத் தொழிலில் ஈடுபடும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினருக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் மூலம் ஆண்டு தோறும் விலையில்லா சலவைப்பெட்டி வழங்கப்படுகிறது. 

இதற்கு ஆண்டு வருமானம் ரூ.72,000 க்கு மிகாமல் இருக்க வேண்டும். நடப்பு 2020-21 ஆம் ஆண்டிற்கு 60 விலையில்லா சலவைப் பெட்டிகள் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு ஒதுக்கீடு பெறப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் வழங்கப்படும் விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து தக்க சான்றிதழ்களுடன் விண்ணப்பித்து பயன்பெறலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.பி.உமாமகேஸ்வரி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments