நடக்க முடியாமல் தவித்த மூதாட்டிக்கு உதவிய சிறுவர்கள்... காவல் ஆய்வாளர் நேரில் வாழ்த்து..!கீரமங்கலம் அருகே உள்ள கொத்தமங்கலம் மேற்கு கிராமத்தில் தனது மகளுடன் வசிக்கும் 74 வயது மூதாட்டி சுப்புலட்சுமி தமிழக அரசு வழங்கும் பொங்கல் பரிசு தொகுப்பை வாங்க ஒரு கிலோமீட்டர் தூரம் உள்ள ரேஷன் கடைக்கு நடந்து சென்று பணமும், பொருளும் வாங்கிக் கொண்டு வீடு திரும்ப முயன்றார்.

ஆனால், வயது முதிர்வு காரணமாக மீண்டும் நடக்க முடியாமல் தவித்த அவருக்கு அப்பகுதியை சேர்ந்த விவசாயி வீரமணி மகன்களான நிதின் (9), நிதிஷ்(9) ஆகிய இருவரும் தங்களது வீட்டில் இருந்த இழுவை வண்டியை எடுத்து வந்து அதில் மூதாட்டியை அமர வைத்து வீட்டில் கொண்டு போய் விட்டனர். சிறுவர்களின் இந்த உதவியை பலரும் பாராட்டி வருகின்றனர். 

இந்தநிலையில் கீரமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், தனிப்பிரிவு போலீஸ் இசக்கியா மற்றும் போலீசார் சிறுவர்களின் வீட்டுக்கு சென்று அவர்களின் மனிதாபிமான செயலை பாராட்டி இனிப்பு மற்றும் ரொக்கப் பரிசு வழங்கினர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments