கோட்டைப்பட்டினத்தில் நடைப்பெற்ற ஒரே நாளில் முழுகுர்ஆனையும் மனனமாக ஒப்புவிக்கும் மகத்தான சாதனை நிகழ்ச்சி.!!கோட்டைப்பட்டினத்தில் நடைப்பெற்ற ஒரே நாளில் முழுகுர்ஆனையும் மனனமாக ஒப்புவிக்கும் மகத்தான சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி தாலுகா கோட்டைப்பட்டினம் முஹ்யித்தீன் ஆண்டகை ஜூம்ஆ பெரியபள்ளிவாசலில் 06.01.2021 புதன்கிழமை காலை சுப்ஹுத் தொழுகையை  தொடர்ந்து இரவு இஷா தொழுகை வரை ஏழு அமர்வுகளாக அரபிக்கல்லூரியில் இவ்வாண்டு ஹாபிழ் பட்டம் பெறும் மாணவர் கோயம்புத்தூர் செல்வபுரத்தை சேர்ந்த அல்ஹாபிழ் ஸலாஹுத்தீன் த/ பெ A.காஜா ஹூசைன் முழு குர்ஆனையும் மனனமாக பொதுமக்கள் முன்னிலையில் ஓதி காட்டி சமர்ப்பித்தார்கள்.


இதில் ஆலிம்கள், ஜமாஅத்தார்கள் மற்றும் பொதுமக்கள்  கலந்து கொண்டனர்.

தகவல்:
மர்கஸூல் உவைஸிய்யா அரபிக்கல்லூரி
முஸ்லிம் ஜமாஅத் நிர்வாகிகள்
கோட்டைப்பட்டினம்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments