ஆவுடையார்கோவில் அரசு மருத்துவமனைக்கு சிறுநீரக சுத்திகரிப்பு கருவி வழங்க நடவடிக்கை...



புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் தலைமையில் நடைபெற்றது.

இதில், கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மாவட்ட வளர்ச்சி குழு மற்றும் கண்காணிப்பு குழு உறுப்பினரும், ஆவுடையார் கோவில் ஊராட்சி ஒன்றியம் காவதுகுடி ஊராட்சி மன்ற தலைவருமான சித்ரா சோனமுத்து பேசும்போது, ஆவுடையார்கோவில் அரசு மருத்துவமனைக்கு சிறுநீரக சுத்திகரிப்பு கருவி வழங்கிட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

அதனை ஏற்று ஆவுடையார் கோவில் அரசு மருத்துவமனைக்கு சிறுநீரக சுத்திகரிப்பு கருவி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேசிய சுகாதார இணை இயக்குனர் தெரிவித்தார்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments