கோட்டைப்பட்டினத்தில் KPM உதவும் கரங்கள் வாட்ஸப் மக்கள் சேவை குழுமம் சார்பாக இலவசமாக மரக்கன்றுகள் வழங்கும் விழா.!கோட்டைப்பட்டினத்தில் KPM உதவும் கரங்கள் வாட்ஸப் மக்கள் சேவை குழுமம் சார்பாக இலவசமாக மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் KPM உதவும் கரங்கள் வாட்ஸப் மக்கள் சேவை குழுமம் சார்பாக பொது மக்களுக்கான இலவசமாக மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி செக் போஸ்ட் அருகாமையில் 10.01.2021 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் கோட்டைப்பட்டிணம் முஸ்லீம் ஜமாஅத் (வக்ஃபு) செயலாளர் ஜிம்(எ)சரிஃப் அப்துல்லாஹ் அவர்கள், துணை தலைவர் ஹோஜா பகுருதீன் அவர்கள் மற்றும் கோட்டைப்பட்டிணம் ஊராட்சி மன்ற தலைவர் சகோதரர் அக்பர் அலி அவர்கள் மற்றும் கோட்டைப்பட்டிணம் உதவி ஆய்வாளர் திரு.கோவிந்த ராஜ் அவர்கள் மற்றும் மணமேல்குடி முன்னால் ஊராட்சி ஒன்றிய தலைவர் திரு.கணேஷன் அவர்கள், சகோதரர் முகமது காஸிம், அபுசாலிஹ், முகமது இத்ரீஸ் கான் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினர். மேலும் பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.  

இறுதி நிகழ்வாக அழைப்பை ஏற்று வருகை புரிந்த அனைத்து நல்உள்ளங்களுக்கும் KPM உதவும் கரங்கள் வாட்ஸப் மக்கள் சேவை குழுமம் சார்பாக நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்தனர்.

தகவல்:
என்றென்றும் கஷ்டப்படக்கூடிய ஏழை,எளிய மக்களுக்கான உதவும் கரங்கள் வாட்ஸப் மக்கள் சேவை குழுமம், கோட்டைப்பட்டிணம்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments