கோட்டைப்பட்டினம் அருகே வடிகால் வாய்க்கால் அமைக்க கோரி சாலை மறியலில் ஈடுபட்ட இரளிவயல் கிராம மக்கள்.!கோட்டைப்பட்டினம் அருகே வடிகால் வாய்க்கால் அமைக்க கோரி கிராமமக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் அருகே இரளிவயல் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் மழை பெய்தால் தண்ணீர் வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது. இதனால் பொதுமக்கள் கடும் பாதிப்படைந்து வருகின்றனர். இதனால் வடிகால் வாய்க்கால் அமைத்துதர வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர்.

மேலும் இந்த கிராமத்திற்கு செல்லும் சாலை பழுதடைந்து காணப்படுவதால் அதனையும் சரி செய்து தர கோரிக்கை வைத்துள்ளதாக கூறப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் இரவு இப்பகுதியில் கனமழை பெய்தது.

மேலும் வடிகால் வாய்க்கால் இல்லாததால் தண்ணீர் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி கிராமமக்கள் திடீரென கிழக்கு கடற்கரை சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த கோட்டைப்பட்டினம் துணை போலீஸ் சூப்பிரண்டு சிவராமன், இன்ஸ்பெக்டர் சாமுவேல் ஞானம் மற்றும் வருவாய்த்துறையினர், ஊராட்சி மன்ற துணை தலைவர் அக்பர் அலி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உங்களது கோரிக்கைகள் விரைவாக சரிசெய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து கிராமமக்கள் சாலைமறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments