கோட்டைப்பட்டினம் பகுதியில் கன மழை: வேரோடு சரிந்து விழுந்த 150 ஆண்டுகள் பழமையான ஆலமரம்கோட்டைப்பட்டினம் பகுதியில் கன மழை காரணமாக 150 ஆண்டுகள் பழமையான ஆலமரம் வேரோடு சாய்ந்தது.

புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு திடீரென கன மழை பெய்தது. இந்த மழை 5 மணி நேரம் இடைவிடாது பெய்தது. இதனால் கண்மாய்கள், குளங்கள் நிரம்பின. விவசாய நிலங்களிலும் தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது. 

இந்த கன மழையால் கோட்டைப்பட்டினம் பகுதியில் உள்ள 150 வருடம் பழமை வாய்ந்த ஆலமரம் வேரோடு சாய்ந்தது. மீன்மார்க்கெட் செல்லும் சாலை முழுவதும்தண்ணீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கின்றன.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments