உழவர் ஒழிப்பு சட்டங்கள் மூன்றையும் முறியடிப்போம் என்ற முழக்கத்தோடு தஞ்சையில் எதிர்வரும் 21ம் தேதி டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் நடத்த இருக்கும் பேரணி பற்றிய விழிபுணர்வு மற்றும் அழைப்பு துண்டு பிரசுரம் வினியோகம் செய்யப்பட்டது.
அறந்தாங்கி பேருந்து நிலையம் அருகில் மாவட்ட செயலாளர் முனைவர் முபாரக் அலி தலைமையில் மாவட்ட பொருளாளர் சேக் இஸ்மாயில் மற்றும் மஜக விவசாய சங்க மாவட்ட செயலாளர் நாகூர் கனி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
மாநில செயற்குழு உறுப்பினர் அஜ்மீர் அலி அனைவரையும் வரவேற்றார் மஜக விவசாய சங்க மாநில செயலாளர் எஸ்.ஏ. சலாம் துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் கொடுத்து துவங்கி வைத்தார்.
சூற்றுச்சூழல் அணி மாவட்ட செயலாளர் சாகுல் ஹமீது, இளைஞர் அணி மாவட்ட துணை செயலாளர் முகம்மது அலியார், கலாச்சார பேரவை மாவட்ட துணை செயலாளர் அப்துல் அமீது, தொழில்நுட்ப அணி மாவட்ட துணை செயலாளர் கலந்தர் மைதீன், நகர செயலாளர் ஜலாலுதீன், தொழிற்சங்க நகர தலைவர் சோலைமலை, ஒன்றிய பொருளாளர் முகம்மது ஆசிக் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துக்கொண்டு பொதுமக்களிடம் விழிபுணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்கள்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments