ஆர்.புதுப்பட்டினம் அல் அமீன் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றம் மற்றும் முஸ்லீம் ஜமாஅத் சார்பாக 72-வது குடியரசு தின விழா கொண்டாட்டம்…!ஆர்.புதுப்பட்டினம் அல் அமீன் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றம் மற்றும் ஆர்.புதுப்பட்டினம் முஸ்லீம் ஜமாஅத் சார்பாக 72-வது குடியரசு தின கொடியேற்றும் நிகழ்ச்சி மற்றும் விளையாட்டு போட்டி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு ஜமாஅத் தலைவர் பிரியம்.முகம்மது அப்துல் காதர் தலைமை தாங்கினார். அல் அமீன் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்ற தலைவர் கலந்தர்பாட்சா வரவேற்புரை நிகழ்த்தினார்.

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தேசிய கொடியினை வருவாய் ஆய்வாளர் முத்துக்குமரன் அவர்கள் ஏற்றிவைத்தார்கள். நிகழ்ச்சியை முன்னாள் அல் அமீன் தலைவர் சேக் தாவூதீன், அல் அமீன் ஆலோசனை குழு உறுப்பினர் அஜ்மல் கான் தொகுத்து வழங்கினார்கள்.

இதில் ஜமாத் நிர்வாகிகள், அல் அமீன் மன்ற நிர்வாகிகள், ஆர்.புதுப்பட்டினம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரிய பெருமக்கள், தாய்மார்கள், இளைஞர்கள், சிறுவர்கள், என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கைப்பந்து போட்டியை வருவாய் ஆய்வாளர் முத்துக்குமரன் மற்றும் ஜமாஅத் தலைவர் பிரியம்.முகம்மது அப்துல் காதர் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

இறுதியில் அல் அமீன் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்ற பொருளாளர் வாசிர் கான் நன்றி கூறினார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments