தலைநகர் டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்திய விவசாயிகள் மீது போலிசார் நடத்திய தாக்குதலை கண்டித்தும், வலதுசாரி மதவெறியர்களின் ஊடுறுவலை கண்டித்தும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் திடீர் மறியல் போராட்டம் நடைபெற்றது.
மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் பங்கேற்ற இப்போராட்டம் 2 மணி நேரத்தில் திட்டமிடப்பட்டு நடந்தேறியது.
மஜக விவசாய அணியினர் தேசிய கொடியும், மஜக கொடியும் கட்டப்பட்ட டிராக்டருடன் வந்து சாலையை மறித்தனர். அவர்களுடன் தொண்டர்களும் களத்தில் திரண்டனர்.
தேசிய கொடிகளையும், மஜக கொடிகளையும் ஏந்தி மஜக-வினர் ஆர்ப்பரித்தனர்.
சற்று நேரத்தில் மூன்று திசைகளிலும் போக்குவரத்து ஸ்தம்பித்தது. பொதுமக்கள் சாலையோரம் திரண்டு வந்து வேடிக்கை பார்க்க அப்பகுதி பரபரப்பானது.
மத்திய அரசுக்கும், பிரதமர் மோடிக்கும் எதிராகவும், அரச வன்முறைகளை கண்டித்தும், விவசாயிகளுக்கு வாழ்த்து கூறியும் எழுப்பப்பட்ட முழக்கங்கள் ECR சாலையை அலற வைத்தது.
பிறகு சாலையில் செல்லும் மக்கள் நலன் கருதி 15 நிமிடங்களில் மறியல் விலக்கி கொள்ளப்பட்டது.
தொடர்ந்து, பத்திரிக்கையாளர்களை சந்தித்த பொதுச் செயலாளர் அவர்கள், பிரதமர் மோடியின் பிடிவாத போக்கை கண்டித்தார். விவசாயிகளின் போராட்ட உணர்வுகளை மதித்து சர்ச்சைக்குரிய 3 வேளாண் சட்டங்களையும் திரும்ப பெற வேண்டும் என்றார்.
மேலும் அமைதியாக அணிவகுத்த விவசாயிகளின் பேரணியில் ஊடுறுவி கலகம் செய்த வலதுசாரி மதவெறியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரினார்.
பிறகு காவல்துறையினர் கைது செய்யாததால் அனைவரும் கலைந்து சென்றனர்.
மாநில செயலாளர் நாச்சிக்குளம் தாஜ்தீன், மாநில விவசாய அணி செயலாளர் அப்துல் சலாம், மாவட்ட செயலாளர் முபாரக் அலி ஆகியோர் குறுகிய நேரத்தில் போராட்டத்தை ஒழுங்குப் படுத்தியிருந்தனர்.
இதில் தலைமை செயற்குழு உறுப்பினர் அஜ்மீர் அலி,மாவட்ட துணைச் செயலாளர்கள் செய்யது அபுதாகிர், சாஜிதீன், விவசாய அணி மாவட்ட செயலளார் நாகூர் கனி, ஒன்றிய செயலாளர் முஜிபுர் ரஹ்மான் உள்ளிட்ட நிர்வாகிகளும், மஜக உறுப்பினர்களும் பங்கேற்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.