பொன்னமராவதி அருகே உள்ள வாராப்பூர் ஊராட்சியில் வரவு செலவு கணக்குகளை வெளிப்படையாக மக்களுக்கு வழங்கிய ஊராட்சி மன்ற தலைவர்.! குவியும் பாராட்டு.!!பொன்னமராவதி அருகே உள்ள வாராப்பூர் ஊராட்சியில், ஒரு ஆண்டுக்கான வரவு-செலவு கணக்குகளை கிராம மக்கள் முன்னிலையில் வெளிப்படையாக அறிவித்ததோடு மட்டுமல்லாமல் அதன் நகல்களை அனைவரின் வீடுகளுக்கும் சென்றடையும் படி வழிவகை செய்த ஊராட்சி மன்ற தலைவர் மலர்விழி நாகராஜனை அனைவரும் பாராட்டினர்.

கடந்த ஓராண்டுக்கு முன்பு தேர்தல் பிரசாரத்தின்போது மக்களிடையே அரசு பணியை செய்திட ஒரு ரூபாய் கூட லஞ்சம் வாங்கமாட்டேன். ஒவ்வொரு ஆண்டும் ஊராட்சி மன்றத்தில் நடைபெறக்கூடிய வரவு-செலவு கணக்குகளை வெளிப்படையாக மக்களுக்கு வழங்குவோம் என்று அளித்த வாக்குறுதியை செயல்படுத்தும் விதமாக வாராப்பூர் ஊராட்சியில் உள்ள முருகன் கோவில் வைத்து ஊராட்சிக்கு உட்பட்ட அனைத்து கிராம மக்கள் முன்னிலையில் வரவு-செலவு கணக்குக்கான பிரதியை ஊராட்சி மன்ற தலைவர் மலர்விழி நாகராஜன் வழங்கினார். 

மேலும் அனைத்து வீடுகளுக்கும் வரவு-செலவு கணக்குகளை சென்றடையும் படி செய்துள்ளார். இதனை, உலகம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாதுரமேஷ், பொன்னமராவதி வி.என்.ஆர் கன்ஸ்ட்ரக்ஸன்ஸ் உரிமையாளர் நாகராஜன், வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் பாராட்டினர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments