தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் புதுக்கோட்டை மாவட்ட செயற்குழு 7-2 -2021 ஞாயிறு அன்று அறந்தாங்கி மர்கஸில் நடைபெற்றது.






தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் புதுக்கோட்டை மாவட்ட செயற்குழு 7-2 -2021 ஞாயிறு அன்று அறந்தாங்கி மர்கஸில் நடைபெற்றது.மாவட்ட தலைவர் முபாரக் அலி தலைமை வகித்தார் மாநில நிர்வாகி திருச்சி சையது முன்னிலை வகித்தார் மாநில பேச்சாளர் ஜமால் உஸ்மானி உரையாற்றினார் இதில் மாவட்ட நிர்வாகிகள் மாவட்டச் செயலாளர் முஹம்மது மீரான்,பொருளாளர் முஹம்மது பாரூக் ,துணை செயலாளர் ஹாரிஸ், ரபிக் ராஜா, பீர்முகம்மது,துணை தலைவர் குலாம் பாஷா,மாணவரணி அன்சாரி ஆகியோர் கலந்து கொண்டனர் .இதில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

1.நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தி பேசிய கல்யாணராமனை வன்மையாக கண்டிக்கிறோம் மேலும் இவனை தேசியபாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்வேண்டும் என இச்செயற்குழ வாயிலாக கேட்டுக்கொள்கிறோம்.

2.முஹம்மது நபி(ஸல்) அவர்கள் வரலாறு குறித்து இரண்டு மாத காலம் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டும் அவர்கள் குறித்த செய்திகளை பிற மத சகோதரர் களிடம் அதிகளவில் கொண்டு செல்வது என்று இச்செயற்குழுவில்முடிவெடுக்கப்பட்டது.

3.திருவாரூர் காரைக்குடி இடையே ரயில் சேவையை அறிமுகப்படுத்துவது சாத்தியமில்லை என்று கூறிய இரயில்வே அமைச்சர் பியூஷ்கோயலை வன்மையாக இச்செயற்குழ கண்டிக்கிறது உடனடியாக இந்த ரயில் சேவையை இயக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.


4.நேற்றைய தினம் கட்டுமாவடி யில் ஜமாஅத்துல் உலமா சபையி னரால் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்திற்கு சிவத்திரு திருவடி குடில் சுவாமிகள் பேசுவதாக இருந்தது இந்த கூட்டத்திற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்துள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது. நபிகள் நாயகம் குறித்து இழிவாக பேசுவதற்கு அனுமதியளிக்கும் காவல்துறை நபிகள் நாயகம் அவர்களின் ஆளுமை குறித்து உயர்வாக பேச இருந்த இந்த கூட்டத்தை தடை செய்தது ஜனநாயகத்திற்கு விரோதமானது ஜனநாயக படுகொலை என்று இச்செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.


5. மத்திய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள சி.பி.எஸ்.இ கல்வி முறையில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு ஆண்டு தேர்வு மே மாதம் நடத்த திட்டமிட்டு இருக்கிறார்கள். அவர்கள் திட்டமிட்டுள்ள அந்தத் தேதியில் ரமலான் பண்டிகை வரக்கூடிய ஒரு சூழல் உள்ளது.

ரமலான் நோன்பு பெருநாள், பிறை தென்படுவதைப் வைத்து தீர்மானிக்கப்படுகிறது. பிறையை பொறுத்து மாறும். ஆகவே ரமலான் நோன்பு பெருநாள் தேதி ஒரு நாள் முன்னதாகவோ, பின்னதாகவோ மாறக் கூடிய வாய்ப்பு உள்ளது.

இதனால் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தை எடுத்து படிக்கும் இஸ்லாமிய மாணவர்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாவார்கள். தேர்வு எழுதும் மாணவர்கள் மனநிலை பாதிக்கப்படும் சூழல் உள்ளதால் மே மாதம் 13,14,15 இந்த குறிப்பிட்ட நாட்களில் சிபிஎஸ்இ தேர்வு வைப்பதை தவிர்க்க வேண்டும் என்று இச்செயற்குழ வாயிலாக கேட்டுக்கொள்கிறோம்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments