அறந்தாங்கி அருகே நாகுடியில் திறக்கப்படாமல் பூட்டியே கிடக்கும் சிறுவர் பூங்கா: பயன்பாட்டிற்கு கொண்டுவர கோரிக்கை




அறந்தாங்கி ஒன்றியம் நாகுடியில் பல லட்ச ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளாகியும் அம்மா பூங்கா திறக்கப்படாததால், மக்களின் வரிப்பணம் வீணாகி வருகிறது.
தமிழக அரசு கிராமப்பகுதி மக்கள் ஓய்வுநேரத்தை குழந்தைகளுடன் கழிப்பதற்காக குழந்தைகள் விளையாட்டு சாதனங்களுடனும், இளைஞர்கள் பெண்கள் உடற்பயிற்சி மேற்கொள்ளவதற்காகவும் பல லட்ச ரூபாய் மதிப்பீட்டில் அம்மா பூங்காக்களை உருவாக்கியது. அதேபோல நாகுடி ஊராட்சியில் அம்மா பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடம் அமைக்கப்பட்டு 2 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் இன்று வரை அம்மா பூங்காவை திறக்க உள்ளாட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் அம்மா பூங்காவின் உள்ளே அமைக்கப்பட்ட புல்தரை, பூச்செடிகள் முறையாக பராமரிக்கப்படாமல் வீணாகி வருகின்றன.

மேலும் உடற்பயிற்சி கூடத்தில் அமைக்கப்பட்ட கருவிகளும் பயன்பாடு இல்லாமல் வீணாகி வருகின்றன. சமீபத்தில் ஆவுடையார்கோவிலில் அமைக்கப்பட்டுள்ள அம்மா பூங்காவை அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்துவைத்தார். ஆனால் நாகுடியில் அமைக்கப்பட்டுள்ள அம்மா பூங்கா இன்னும் திறக்கப்படவில்லை. இதுகுறித்து பகுஜன்சமாஜ் கட்சி நிர்வாகி சின்னத்துரை கூறியது: நாகுடி மக்கள் ஓய்வு நேரங்களில் பொழுதை கழிப்பதற்காகவும், பெண்கள், ஆண்கள் உடற்பயிற்சி மேற்கொள்ளவும், குழந்தைகள் விளையாடி மகிழவும் தமிழக அரசு அம்மா பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடங்களை அமைத்துள்ளது.

தற்போது இந்த பூங்கா ஆவுடையார்கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திறக்கப்பட்டுள்ள நிலையில் நாகுடியில் மட்டும் திறக்கப்படவில்லை. இதுகுறித்து ஊராட்சி ஒன்றியம் மற்றும் கிராம ஊராட்சி நிர்வாகங்களிடம் கேட்டால் அவர்கள் முறையாக பதில் அளிப்பதில்லை. பூங்கா திறக்காததால் மக்களின் வரிப்பணம் வீணாவதாக குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.எனவே மாவட்ட நிர்வாகம் நாகுடியில் திறக்கப்படாமல் வீணாகி வரும் அம்மா பூங்காவை திறக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே நாகுடி பகுதி மக்களின் கோரிக்கையாகும்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments