அறந்தாங்கியில் அரசுப்பணி தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகளில் சேர அழைப்பு.! வருகிற பிப்.13 முதல் வகுப்புகள் ஆரம்பம்.!அறந்தாங்கி சங்கம்  IAS அகாடமி மற்றும் திசைகள் மாணவ வழிகாட்டு அமைப்பு இணைந்து நடத்தும் அரசுப்பணி / IAS/ TET போன்ற பல்வேறு தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகளை 13.02.2021 சனிக்கிழமை மதியம் 3.00 மணியளவில் அறந்தாங்கி பெரிய பள்ளிவாசல் எதிரில் உள்ள MM காம்ப்ளக்ஸில் ஆரம்பிக்கப்பட உள்ளது.

எனவே பட்டதாரிகளாய் இருந்தும் சரியான வேலைவாய்ப்பு இன்றி தவிக்கும் ஏழை எளிய இளைஞர்களுக்கு பல்வேறு அரசுப்பணி தேர்வுகளுக்கு பயிற்சியளிக்கும் பொருட்டு கட்டணமின்றி தொடங்க இருக்கும் இந்த நல்வாய்ப்பை அறந்தாங்கி மற்றும் அறந்தாங்கி சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள இளைஞர்கள் பயன்படுத்திக்கொண்டு வாழ்வில் உயர்வு பெறவேண்டும் என அன்போடு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இந்த மிகப்பெரும் முயற்சிக்கு பெரும் ஒத்துழைப்பு கொடுத்த சங்கம் IAS அகாடமியின் நிறுவனர் அன்பிற்குரிய தம்பி திரு.யோகராஜ் அவர்களுக்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றிகளும் பாராட்டுகளும்.

இளைஞர்களே..
வாய்ப்பை பயன்படுத்துங்கள்..

வாழ்வில் சிகரம் தொடுங்கள்..

தொடர்புக்கு: 9786788830

நம்பிக்கையோடு
Dr.ச.தெட்சிணாமூர்த்தி, MBBS.,DDVL.,
தலைவர்,
திசைகள் மாணவ வழிகாட்டு அமைப்பு,
அறந்தாங்கி
9159969415

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments