நாகுடி அரசு மருத்துவருக்கு சமூக அமைப்பு சார்பில் பாராட்டு.!அறந்தாங்கி அருகே நாகுடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதிதாக பொறுப்பேற்ற அரசு மருத்துவர் அசாருதீனுக்கு உதவும் கரங்கள் சேவை குழுமத்தின் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் நாகுடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அரசு துறைகளில் புதிதாக பொறுப்பேற்கும் சாதனையாளர்களை கண்டறிந்து  உதவும் கரங்கள் சேவை குழுமம் கெளரவப்படுத்துகிறது. இந்நிலையில் அறந்தாங்கி வட்டத்திற்கு உட்பட்ட நாகுடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொது மருத்துவராக நேற்று பொறுப்பேற்ற குழுமத்தின் செயற்குழு உறுப்பினரும், மருத்துவ ஆலோசகருமான மருத்துவர் அசாருதீனுக்கு உதவும் கரங்கள் சேவை குழுமம் சார்பில் பூங்கொத்து பாராட்டு தெரிவித்து கௌரவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் உதவும் கரங்கள் சேவை குழுமத்தின் தலைவர் செயலாளர் பொருளாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments