மீமிசலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் நடைபெற்ற மாபெரும் தொடர் முழக்க கண்டன ஆர்ப்பாட்டம்.!புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுக்கா குணத்துராம் பட்டி கிராமத்தை சேர்ந்த சுந்தர மகன் மதன் என்பவரை கடந்த சில நாட்களுக்கு முன்பு சாதி வெறி ஆதிக்கத்தோடு கொலைவெறி தாக்குதல் நடத்தி வாயில் சிறுநீரகப் பாய்ச்சியதை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது. 

இந்நிலையில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு அனுமதி கேட்டு மீமிசல் காவல்நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள்  சார்பில் மனு அளிக்கப்பட்டது. ஆனால் ஆர்ப்பாட்டத்திற்கு போலீஸ் அனுமதி மறுக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று 10.02.2021 மீமிசல் கடைவீதியில் விடுதலை சிறுத்தை கட்சிகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, தமிழர் விடுதலைக் கழகம், மனிதநேய ஜனநாயகக் கட்சி, மனித நேய மக்கள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), தேவேந்திர நல கூட்டமைப்பு, எஸ்.டி.பி.ஐ, தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம், மக்கள் அதிகாரம், cpi (ml), ஊரக மக்கள் வாழ்வுரிமை கூட்டமைப்பு, ஆகிய கட்சிகள் சேர்ந்த நிர்வாகிகள் ஒன்று கூடி ஆர்ப்பாட்டம் நடத்த முன்வந்த போது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டதால் ஆர்ப்பாட்டம் நடத்த கூடாது என்று கூறியதால் கட்சி நிர்வாகிகளுக்கும் போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து  ஆர்ப்பாட்டம் நடத்த வந்தவர்கள் காவல்துறையை கண்டித்து கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றதால் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments