மணமேல்குடியில் இன்று பிப்.17 மாலை 5 மணியளவில் யார் அந்த முஹம்மது நபி என்ற தலைப்பில் சமூக நல்லிணக்க பொதுக்கூட்டத்திற்கு அழைப்பு.!மணமேல்குடியில் யார் அந்த முஹம்மது நபி.? என்கிற தலைப்பில் சகோதர மதத்தலைவர்கள் மற்றும் அனைத்து கட்சியினர் கலந்து கொள்ளும் சமூக நல்லிணக்க பொதுக்கூட்டம் இன்று 17.02.2021 (புதன்கிழமை) மாலை 5.00 மணியளவில் மணமேல்குடி கடைவீதியில் நடைபெற உள்ளது.

இவ்விழாவில் சிவத்திரு திருவடிக்குடில் சுவாமிகள் (நிறுவனர், ஜோதிமலை இறைபணி திருக்கூட்டம், கும்பகோணம்), அருட்தந்தை.ஜோசப் மைக்கேல் (சேசுசபை சார்ந்த ஓரியூர் திருத்தலம்), சகோதரி. சமூக ஆசிரியர் சபரிமாலா (நிறுவனர், பெண் விடுதலை கட்சி) மற்றும் சகோதரர்.பரணி இ.ஏ.கார்த்திகேயன் B.A., ஒன்றிய பெருந்தலைவர்,மணமேல்குடி & மாநில தேர்தல் பணிக்குழு செயலாளர் தி.மு.க ஆகியோர் சிறப்புரை நிகழ்த்த உள்ளனர்.

அதுசமயம் மணமேல்குடி மற்றும் சுற்றுவட்டார மக்கள் அனைவரும் கலந்து கொள்ளும்படி அன்போடு அழைக்கிறார்கள்.

தகவல்: பொதுநல இளைஞர் பேரவை, அம்மாபட்டினம்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments