கீழக்கரை ஸ்போர்ட்ஸ் அகாடமி என்ற பெயரில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் வழிகாட்டு குழு அமைப்பு.!!கீழக்கரை தெற்கு தெருவில் உள்ள பல்வேறு நற்பணிசங்கங்கள் மற்றும் அமைப்புகளின் ஒன்றிணைந்த கூட்டம் 14.02.2021 ஞாயிற்றுக்கிழமை இஸ்லாமியாபள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இஸ்லாமிய பள்ளிகளின் தாளாளர்  எம்.எம்.கே முகைதீன்இப்ராஹிம் தலைமை தாங்கினார்.

அது சமயம் கீழ்க்கண்ட தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன:

1.கீழக்கரையில் மாணவர்கள் மத்தியில் அதிகமாக புழங்கப்படும் போதை பொருட்கள் பற்றி பெற்றோர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

2.மாணவர் சமுதாயத்தை சீரழிக்கும் போதைப் பொருட்களை விற்பனை செய்து வரும் வியாபாரிகள் காசுக்காக விபச்சாரம் செய்து வருபவர்களை விட கீழ்த்தரமானவர்கள். எனவே அவர்களைக் கண்டறிந்து அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

3.தெற்கு தெரு பகுதியை குற்ற செயல்பாடுகள் நடைபெறாத பகுதியாக பாதுகாப்பது, தெருவில் உள்ள மைதானங்கள் மற்றும் மைய வாடி பகுதிகளில் இரவு நேரங்களில் சமூக விரோத செயல்கள் நடைபெறாத வண்ணம் கண்காணிப்பது.

4.தெற்கு தெரு ஜமாத்துக்கு சொந்தமான இஸ்லாமியா பள்ளிகளின் விளையாட்டு மைதானத்தை சீர் செய்து, தரமான விளையாட்டு மைதானம் உருவாக்குவது.

5.கீழக்கரை ஸ்போர்ட்ஸ் அகாடமி என்ற பெயரில் விளையாட்டுக் குழு ஏற்படுத்தி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு விளையாட்டு பயிற்சி அளிப்பது மற்றும் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்துவது.

6.இஸ்லாமியா பள்ளி விளையாட்டு மைதானத்தில் பெண்கள் மற்றும் சிறுவர்கள் பயன்பெறும் வகையில் அழகிய பூங்கா அமைத்து, காலை, மாலை வேளைகளில் பெண்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ள வசதிகள் ஏற்படுத்தி கொடுப்பது.

7.தெற்கு தெரு விளையாட்டு மைதானம் மேம்பாட்டு நிதியாக ரூ.1 லட்சம் உடனடியாக தந்து உதவிய ஹமீதியா தொடக்கப் பள்ளி முன்னாள் தாளாளர் சிராஜூதீனுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

இக்கூட்டத்திற்கு, தெற்குதெரு முஸ்லிம் பொது நல சங்கம் நிர்வாகிகள்;-

ஆனா மூனா முகைதீன் காதர் சாஹிப், சுபியான், ஆதில், ஹாதில்

புதுத்தெரு முஸ்லிம் வாலிபர் முன்னேற்ற சங்க நிர்வாகிகள்

காதர் இப்ராஹிம், பாதுஷா, முஹம்மது மஜீத் கருணை, சீனி முஹம்மது

ஜாமியா நகர் இஸ்லாமியா சமதர்ம சங்கம் நிர்வாகிகள்

சதக்கத்துல்லாஹ், பயாஸ், சதாம், முஜாஹித்

தவ்ஹீத் ஜமாஅத் தெற்கு தெரு கிளை நிர்வாகிகள்

தினாஜ் கான்

பாத்திமா நற்பணி மன்றம்

காசிம் பலீல், நஜ்முதீன்​

மற்றும் பல விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments