அறந்தாங்கி திசைகள் மாணவ வழிகாட்டு அமைப்பு சார்பில் நடைபெற்ற கொரோனா விழிப்புணர்வு மற்றும் இளைஞர் வேலைவாய்ப்பு வழிகாட்டல் நிகழ்ச்சி .!அறந்தாங்கி திசைகள் மாணவ வழிகாட்டு அமைப்பு அறந்தாங்கி ஒன்றியம், ஆமாஞ்சி ஊராட்சி, புதுக்காலனியில் கொரோனா விழிப்புணர்வு மற்றும் இளைஞர் வேலைவாய்ப்பு வழிகாட்டல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்வில் கொரோனா முன்னெச்சரிக்கை, தடுப்பூசிகளுக்கான விழிபுணர்வு, அனைவருக்கும் முகக்கவசம், விழிப்புணர்வு பிரச்சார கையேடு ஆகியவை வழங்கப்பட்டது.

இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் பற்றி விரிவான விளக்கமும் அவர்களின் திறன் மேம்படுவதற்காக பயிற்சி வழிமுறைகளும் விளக்கப்பட்டன.

திசைகள் அமைப்பின் தலைவர் Dr.ச.தெட்சிணாமூர்த்தி, கபார்கான், சற்குருநாதன், தாஜிதீன், புவியரசன்  உள்ளிட்டோர் கல்வி, சுகாதாரம், சுற்றுச்சூழல், பெண்கள் மேம்பாடு பற்றியும், திசைகள் அமைப்பின் 16 ஆண்டு கால சாதனைகளை விளக்கி சிறப்புரையாற்றினர். எவர்கிரீன் பள்ளி தாளாளர் திரு.முபாரக் அலி வரவேற்புரையும், திரு.சுரேஷ்ராஜ் நன்றியுரையும் நிகழ்த்தினர்.

திசைகள் அமைப்பை சார்ந்த மாடசாமி, அண்ணாத்துரை, முகமதுமுபாரக், ரியாஸ், விக்னேஷ் , ஏராளமான பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments