மீமிசலில் நடைபெற்ற முஹம்மது நபி யார்? (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) விளக்க கூட்டம்.!!!புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா மீமிசலில் கடற்கரை வட்டார உலமா சபை, அல்-இஸ்லாஹ் பவுண்டேஷன் டிரஸ்ட் மற்றும் ஐக்கிய ஜமாஅத் இணைந்து நடத்திய முஹம்மது நபி யார்? (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) விளக்க கூட்டம் மீமிசல் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள MKR ராசி திருமண மஹாலில் 20/02/2021 சனிக்கிழமை அன்று மாலை 6 மணியளவில் நடைபெற்றது.

இந்த விளக்க கூட்டத்தில் சிவத்திரு.திருவடிக் குடில் சுவாமிகள் (நிறுவனர் ஜோதிமலை இறைபணி திருக்கூட்டம் - கும்பகோனம்) ஆளுமை மிக்க முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) என்ற தலைப்பிலும், மௌலனா அல்ஹாஜ் A.அப்துல் அஜீஸ் பாக்கவி (தலைமை இமாம் கரும்பு கடை சுன்னத் ஜமாஅத் பள்ளி - கோவை ,துணை செயலாளர் தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபை தமிழ்நாடு) முஹம்மது நபியின் பலதா திருமணம் ஏன்? என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள்.

இந்த விளக்க்கூட்டத்தில் கடற்கரை வட்டார உலமா சபை நிர்வாகிகள், அல்-இஸ்லாஹ் பவுண்டேஷன் டிரஸ்ட் நிர்வாகிகள், ஐக்கிய ஜமாஅத் நிர்வாகிகள் 
மற்றும் பொதுமக்கள், இளைஞர்கள், பெரியோர்கள் திரளாக கலந்து கொண்டனர்.


புகைப்பட உதவி: சுல்தான் அப்துல் காதர் 

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments