அறந்தாங்கி பகுதியில் வழி தவறி சுற்றித்திரிந்த மனநலம் பாதிக்கப்பட்ட நபரை குடும்பத்தினரிடம் சேர்த்த காவல்துறையினர்.! குவியும் பாராட்டு.!!!அறந்தாங்கி பகுதியில் வழி தவறி சுற்றித்திரிந்த மனநலம் பாதிக்கப்பட்ட நபரை குடும்பத்தாருடன் சேர்த்த அறந்தாங்கி காவல்துறையினருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியில் ஒரு நபர் மனநலம் சரியில்லாமல் சுற்றி கொண்டிருப்பதாக அறந்தாங்கி காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் அறந்தாங்கி காவல்துறையினர் அப்பகுதிக்கு சென்று அந்நபரை மீட்டு விசாரித்த போது தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. 

இதையடுத்து அப்பகுதி காவல் நிலையத்தை அணுகி விவரங்களை கூறி நபரின் பெற்றோரை அடையாளம் கண்டு வரவழைக்கப்பட்டு அறிவுரை கூறி நேற்று 20.02.2021 அனுப்பி வைத்தார்கள்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments