திமுகவில் அறந்தாங்கி தொகுதியில் போட்டியிட இயக்குநர் நடிகர் போஸ் வெங்கட் விருப்ப மனு
திமுகவில் அறந்தாங்கி சட்டசபை தொகுதியில் போட்டியிட இயக்குநரும் நடிகருமான போஸ் வெங்கட் விருப்ப மனு அளித்துள்ளார்.

தமிழகம், புதுச்சேரி சட்டசபை தேர்தலில் திமுகவில் வேட்பாளராக போட்டியிட விரும்புவோர் கடந்த 17-ந் தேதி முதல் விருப்ப மனு அளித்து வருகின்றனர். இந்த விருப்ப மனுவை வரும் 24-ந் தேதி வரை அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.


இதனையடுத்து பிப்ரவரி 28-ந் தேதி வரை விருப்ப மனு அளிக்க கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்திருந்தார்.


இந்த நிலையில் அறந்தாங்கி சட்டசபை தொகுதியில் போட்டியிடுவதற்கு இயக்குநரும் நடிகருமான போஸ் வெங்கட் விருப்ப மனு அளித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் இந்த விருப்ப மனுவை போஸ் வெங்கட் இன்று கொடுத்தார். திமுகவின் தலைமை கழக பேச்சாளராக போஸ் வெங்கட் இருந்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments