தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள மார்த்தாண்டம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சீனிமுருகன், இவர் கூலி வேலை செய்து வருகிறார், இவருடைய மனைவி ஜோதிமணி. இவர்களுக்கு மதன் (16), பாலகுரு (13) இரு மகன்கள் உள்ளனர். தூத்துக்குடியில் உள்ள தனியார் பள்ளியில் இருவரும் படித்து வந்துள்ளனர். பாலகுரு 6ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். வழக்கமாக மதன் மற்றும் பாலகுரு இருவரும் தங்களது பெற்றோர்களின் செல்போன்களை கொண்டு விளையாடுவது வழக்கம் என்று கூறப்படுகிறது. மேலும் மதன் மற்றும் பாலகுரு இருவரும் செல்போனுக்கு சண்டை செய்து வருவதும் வழக்கம் என்று தெரிகிறது.
இந்நிலையில் நேற்று காலையில் 9ஆம் வகுப்பு படிக்கும் மதன் பள்ளிக்கு சென்று விட்டார். சீனிமுருகன் வேலைக்கு சென்று விட்டார். ஜோதிமணி விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் நடைபெறும் உறவினர் வீட்டு திருமணத்திற்கு கிளம்பியுள்ளார். கொரோனா தொற்று காரணமாக பள்ளி விடுமுறை என்பதால் பாலகுரு வீட்டில் இருந்துள்ளார். தாய் கிளம்பியதும் தானும் திருமண நிகழ்ச்சிக்கு வருவதாக பாலகுரு கூறியுள்ளார். ஆனால் ஜோதி மணி வீட்டிலேயே இருக்கும் படி கூறியுள்ளார்.
அதற்கு மாணவன் பாலகுரு வீட்டில் இருக்க வேண்டும் என்றால் செல்போனை தரும்படி கேட்டுள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்த ஜோதிமணி, சாப்பிட்டு விட்டு வீட்டில் இருக்கும் படியும், வெளியில் சென்று விளையாடக்கூடாது என்றும் கூறி விட்டுச்சென்றுள்ளார். திருமண நிகழ்ச்சி முடிந்து ஜோதிமணி வீட்டிற்கு வந்து பார்த்தபோது பாலகுரு தூக்கில் தொங்கிய படி உயிரிழந்த நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.
ஜோதிமணியின் அழுகுரலை கேட்ட அருகில் இருந்தவர்கள் விரைந்து வந்து, விளாத்திகுளம் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். போலீசார் விரைந்து வந்து சிறுவன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து, போலீசார் விசாரணை நடத்தியதில் தனது தாய் செல்போன் தரவில்லை, தன்னையும் அழைத்து போகவில்லை என்ற காரணத்தினால் பாலகுரு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.
தாய் செல்போன் தரவில்லை என்பதற்காக சிறுவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.