வாட்ஸ் ஆப் call- ஐ ரெக்கார்டு செய்ய முடியமா? உங்கள் சந்தேகத்திற்கு இதோ பதில்!




தொலைபேசி மூலம் நாம் அழைக்கும்போது அல்லது மற்றவர்கள் நமக்கு அழைக்கும்போது, இருவருக்கும் இடையே நடைபெறும் உரையாடலை எளிதாக பதிவு செய்துகொள்ளலாம். அந்த வசதி அனைத்து தொலைபேசிகளிலும் செட்டிங்ஸில் கொடுக்கப்பட்டிருக்கிறது.

ஆனால், வாட்ஸ் ஆப் கால் மூலம் மேற்கொள்ளப்படும் வாய்ஸ் அழைப்புகளை பதிவு செய்ய முடியுமா? என பெரும்பாலானோருக்கு சந்தேகம் இருந்து வருகிறது. பதிவு செய்ய முடியும் என்றால் எப்படி பதிவு செய்வது? என தேடுபவர்களுக்கு பதில் இங்கே உள்ளது.

ஆன்டிராய்டு மற்றும் ஐ போன் என எந்த தொலைபேசியாக இருந்தாலும் வாட்ஸ் ஆப் மூலம் மேற்கொள்ளப்படும் உரையாடல்களை எளிதாக பதிவு செய்யலாம். ஆனால், அதற்கு முன் நாம் சில விஷயங்களை செய்ய வேண்டியிருக்கிறது.

ஐ போன் யூசர்ஸ் (iPhone users)

ஐபோன் வைத்திருப்பவர்கள், உங்கள் தொலைப்பேசி வழங்கப்பட்டிருக்கும் லைட்டினிங் கேபிளை மேக் கம்யூட்டருடன் இணைக்க வேண்டும். முதன்முறையாக உங்கள் ஐபோனையும், மேக் கம்யூட்டரையும் இணைக்கிறீர்கள் என்றால், திரையில் தோன்றும் டிரஸ்ட் திஸ் கம்யூட்டர் ('Trust this computer) என்ற ஆப்சனை தேர்ந்தெடுக்க வேண்டும். பின்னர், மேக் கம்யூட்டரில் உள்ள குயிக் டைமை (QuickTime) ஓபன் செய்து அதில் உள்ள நியூ ஆடியோ ரெக்கார்டிங் ஆப்சனை தேர்வு செய்யுங்கள். அங்குள்ள கீழ்நோக்கிய அம்புக்குறியை தேர்வு செய்து, அதில் காட்டும் ஐ போன் ஆப்சனை கிளிக் செய்யுங்கள். அதன்பிறகு குயிக் டைமில் உள்ள ரெக்கார்டு பட்டனை அழுத்தவும். இதனையடுத்து, ஐ போனில் இருந்து உங்கள் நண்பர் யாரேனும் ஒருவருக்கு வாட்ஸ் ஆப் காலில் அழையுங்கள். அப்போது, உங்கள் கால் இணைக்கப்பட்டவுடன், மேக் கம்யூட்டரில் கால் ரெக்கார்டிங் ஆகும். அந்த பைல் உங்கள் கம்யூட்டரில் சேமித்து வைக்கப்படிருக்கும். தேவைப்படும்போது அந்த பைலை நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.

ஆன்டிராய்டு யூசர்ஸ் (Android Users)

ஆன்டிராய்டு செல்போன்களை பயன்படுத்துபவர்கள், உங்கள் தொலைபேசியில் கியூப் கால் ரெக்கார்டர் (Cube Call Recorder app) செயலியை பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள். பின்னர், அந்த செயலியை ஓபன் செய்து, வாட்ஸ்அப்புடன் இணைத்துவிடுங்கள். இதன்பிறகு நீங்கள், வாட்ஸ் அப் மூலம் யாரையாவது அழைத்தால், உங்கள் கால் கியூப் ரெக்கார்டரில் பதிவாகியிருக்கும். ஒருவேளை அழைப்புகளை பதிவு செய்வதில் நீங்கள் சிரமத்தை எதிர்கொண்டிருந்தால், கியூப் ரெக்கார்டரில் உள்ள செட்டிங்ஸை ஓபன் செய்து Force VoIP call as a voice call என்ற ஆப்சனை தேர்வு செய்யுங்கள். தற்போது, மீண்டும் வாட்ஸ் ஆப் காலில் அழைத்து, உங்கள் கால் பதிவாகிறதா என்பதை சோதனை செய்து பாருங்கள். இப்போதும், உங்கள் கால் ரெக்கார்டிங் ஆகவில்லை என்றால், இந்த செயலி உங்கள் தொலைபேசி செட்டிங்ஸூக்கு பொருந்தவில்லை என்பதை கண்டுகொள்ளுங்கள்.

வாட்ஸ்அப் தொடர்பான சில முக்கிய தகவல்கள்

*மொபைல் டேட்டா அல்லது வைஃபை மூலம் வாட்ஸ்அப் அழைப்புகள் மேற்கொள்ளப்படுவதால், வாட்ஸ்அப் காலுக்கும், ஃபோன் பில்லுக்கும் சம்பந்தம் இல்லை. டேட்டா இருந்தால் மட்டும்போதும், நீங்கள் யாருடன் வேண்டுமானாலும் பேசிக்கொள்ளலாம்.

*வாட்ஸ்அப்பில் என்ட் டூ என்ட் என்கிரிப்ஷன் (end-to-end encryption) பாதுகாப்பு அம்சம் இருப்பதால், வாட்ஸ்அப் நிறுவனம் உள்ளிட்ட மூன்றாவது நபர் உங்கள் மெசேஜ்களை படிக்க முடியாது

*வாட்ஸ்அப்பில் நீங்கள் அனுப்பும் மெசேஜ், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை டெலிட் செய்தாலும், காவல்துறையால் ரெக்கவரி செய்ய முடியும்.

*நீங்கள் ஒருவருக்கு தவறாக அல்லது மாறுதலாக மெசேஜ் அனுப்பிவிட்டால், அந்த மெசேஜை கிளிக் செய்யுங்கள். ஸ்கிரீனின் மேல்புறம் டெலிட் சிம்பளான குப்பைத் தொட்டி காண்பிக்கப்படும். அதனை நீங்கள் கிளிக் செய்து, Delete Every one ஆப்சனை தேர்தெடுத்தால், அந்த மெசேஜ் Sender மற்றும் Receiver என இருபுறங்களிலும் அழிந்துவிடும்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments