அரசர்குளம் தென்பாதியில் அம்மா மினி கிளினிக் திறப்புஅரசர்குளம் தென்பாதியில் அம்மா மினி கிளினிக் திறப்பு விழா நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுகா அரசர்குளம் தென்பாதி ஊராட்சியில் அம்மா மினி கிளினிக் திறப்பு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. அரசர்குளம் தென்பாதி ஊராட்சியில் செயல்பட்டு வந்த துணை ஆரம்ப சுகாதார நிலையம் கடந்த சில ஆண்டுகளாக பயன்பாட்டில் இல்லாமல் இருந்து வந்தது, அடிப்படை மருத்துவ வசதியின்றி கிராம பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வந்தன, துணை ஆரம்ப சுகாதார நிலையத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர அரசுக்கு பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் அம்மா மினி கிளினிக் தமிழகத்தில் திறக்கப்பட உள்ளதாக தமிழக முதல்வர் அறிவித்ததையடுத்து, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் அரசர்குளம் கிளை சார்பாக கடந்த டிசம்பர் 21 அன்று போதிய அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இருப்பதால் அம்மா மினி கிளினிக்கை தொடங்க வேண்டும் என அறந்தாங்கி மாவட்ட துணை சுகாதார இயக்குனர் அவர்களிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.மேலும் ஊராட்சி மன்றத்தின் சார்பிலும் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினரும் தொடர் அழுத்தம் கொடுத்து வந்தனர்.

இதனையடுத்து மினி கிளினிக் தொடங்குவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு, துணை ஆரம்ப சுகாதார நிலையம் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு கடந்த 24-ஆம் தேதி புதன்கிழமை தமிழக குடும்ப நல மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்களால் திறந்து வைப்பதற்காக பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. சில முக்கிய நிகழ்வுகளில் கலந்து கொள்ள வேண்டி இருந்ததால் அமைச்சரின் வருகை கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது.

இதையடுத்து நேற்று முன்தினம் அரசர்குளம் தென்பாதி ஊராட்சி மன்ற தலைவர் அவர்களால் மினி கிளினிக் திறந்து வைக்கப்பட்டது. அம்மா மினி கிளினிக் திறப்பு விழாவில் அரசர்குளம் ஜமாத் தலைவர் MS.இப்ராகிம் அவர்கள்  தனது சொந்த செலவில் ரூபாய் 60000/- மதிப்புள்ள ECG கருவியை மருத்துவ அலுவலரிடம்  நன்கொடையாக வழங்கினார்.

இந்நிகழ்வில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர், வார்டு உறுப்பினர்கள், ஜமாத்தார்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் அரசர்குளம் கிராமத்தினர், சுகாதாரத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments