ஏம்பக்கோட்டை ரஹீமா பரக்கத் மக்தப் மதரஸா & நிஸ்வான் மதரஸாவில் நடைபெற்ற கிராஅத் போட்டி.!



ஏம்பக்கோட்டை ரஹீமா பரக்கத் மக்தப் மதரஸா & நிஸ்வான் மதரஸாவில் கிராஅத் போட்டி நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பக்கோட்டை ரஹீமா பரக்கத் மக்தப் மதரஸா & நிஸ்வான் மதரஸாவில் நேற்று முன்தினம் (31/01/2021) காலை முதல் அமர்வில் பின் வரும் வகுப்புகளுக்கு குர்ஆன் கிராஅத் போட்டி நடைபெற்றது.

1)பாலர் வகுப்பு 
0 class
( 5 வயதுவரை உண்டான சிறுவர் சிறுமியர்)

2) பிரைமரி முதல் வகுப்பு 
 A .CLASS 
 ( 6 வயது முதல் 10 வயது வரை உண்டான சிறுவர் சிறுமியர்) 

3) பிரைமரி முதல் வகுப்பு B. CLASS
( 6 வயது முதல் 10 வயது வரை உண்டான சிறுவர் சிறுமியர்)


4) பாலிகான் ஆண்கள் வகுப்பு 
(11வயது முதல் 16 வயது வரை உண்டான ஆண்கள் மட்டும்)


5) பாலிகான் பெண்கள் வகுப்பு 
( 11 வயது முதல் வயதுக்கு வராத பெண்கள் மட்டும்)

மாலை அஸர் தொழுகைக்குப்பின் இரண்டாம் அமர்வில் நபிலான வணக்கங்களும்-இறை நெருக்கமும் என்ற தலைப்பில் மதரஸாவின் தலைமை ஆசிரியர் மௌலவி.பாஜில்,காரி,J.முகமது மைதீன் தாவூதி ஹஜரத் உரையாற்றினார்கள்.

பின்னர்  10 வயதுக்கு மேற்பட்ட அனைத்து மாணவிகளுக்கும் தினசரி அமல் சாட் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியின் இறுதியாக காலையில் நடைபெற்ற கிராஅத் போட்டியில் வெற்றி பெற்ற அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் ரஹீமா பரக்கத் மதரஸா நிர்வாகம் மூலமாக பரிசுகள் வழங்கப்பட்டது. பரிசுகளை தாருஸ் ஸலாம் ஜும்ஆ பள்ளி இமாம் மௌலவி.முகமது ரபீக் ரியாஜி ஹஜரத் அவர்கள் வழங்கினார்கள்.

இந்நிழ்ச்சியில் அனைத்து மாணவ, மாணவிகளின் பெற்றோர்களும், தாய்மார்களும், ஜமாஅத்தார்களும் கலந்துகொண்டனர். இறுதியாக மௌலவி.Y.முஜாஹித் முனீரி அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்கள்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments