நெடுங்குடி ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவரின் மகன் நிர்வாகத்தில் தலையிடுவதை நிறுத்தக்கோரி கிராமமக்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை மனு



அரிமளம் ஊராட்சி ஒன்றியம், நெடுங்குடி ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவராக ராமன் என்பவர் உள்ளார்.
 
இந்நிலையில் இவரது மகன் ராஜமாணிக்கம் என்பவர் ஊராட்சி நிர்வாகத்தில் நேரடியாக தலையிட்டு கோப்புகளை ஆய்வு செய்வதாகவும், 100 நாள் வேலை நடைபெறும் இடத்தில் ராஜமாணிக்கம் ஆண்களுடன் வந்து பிரச்சினை செய்வதாகவும், ஊராட்சி நிர்வாகத்தில் ராஜமாணிக்கம் தலையிடுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என 150-க்கும் மேற்பட்ட கிராமமக்கள் அரிமளம் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆயிஷா ராணியிடம் மனு அளித்தனர். 

மனுவை பெற்றுக்கொண்ட அவர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை அடுத்து கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். முன்னதாக புதுக்கோட்டை மாவட்ட கலெக்டரை சந்தித்து இதே கோரிக்கையை வலியுறுத்தி கிராம மக்கள் மனு அளித்தனர். இதனால் அரிமளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments