பாலக்குடி கிராமத்தில் ஆக்கிரமிப்பை அகற்றாவிட்டால் தேர்தலை புறக்கணிப்பதாக ஒட்டிய சுவரொட்டியால் பரபரப்பு



புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினம் அருகே உள்ள பாலக்குடி கிராமத்தில் உள்ள பாதையை தனிநபர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் அரசுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்தனர். 

இதனையடுத்து அவர்களை அழைத்து மணமேல்குடி தாசில்தார் பேச்சுவார்த்தை நடத்தினார் என்று கூறப்படுகிறது. அப்போது ஆக்கிரமிப்பை விரைவில் அகற்றுவோம் என்று உறுதி அளித்ததன் பேரில் சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். 

ஆனால் இதுவரைக்கும் ஆக்கிரமிப்பு அகற்றப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் ரேஷன் கார்டு மற்றும் வாக்காளர் அடையாள அட்டையை ஒப்படைத்து வருகின்ற சட்டமன்ற தேர்தலை புறக்கணிப்பதாக தெரிவித்துள்ளனர். 

மேலும் இதுகுறித்து சுவரொட்டியும் ஒட்டி உள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments