ஆவுடையார்கோவில் அருகே பெருநாவலூர் அரசு கல்லூரியில் மாணவர் பேரவை தொடக்க விழா.!



ஆவுடையார்கோவிலை அடுத்த பெருநாவலூரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் மாணவர் பேரவை தொடக்க விழா கல்லூரி திருவள்ளுவர் அரங்கத்தில் நடைபெற்றது.

விழாவிற்கு கல்லூரி முதல்வர் கண்ணன் தலைமை தாங்கினார். வணிகவியல் துறை தலைவர் ராஜேந்திரன் வரவேற்றார். அறந்தாங்கி கூட்டுறவு விற்பனை சங்கத்தின் பொதுமேலாளர் மற்றும் கராத்தே பிரதர்ஸ் சமூக நல அறக்கட்டளையின் தலைவர் சுப்பிரமணியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, மாணவர் பேரவை நிர்வாகிகளுக்கு நூல்கள் வழங்கி, சிறப்புரை ஆற்றினார். 

மாணவர் பேரவை தலைவராக, இளங்கலை ஆங்கிலம் 3-ம் ஆண்டு மாணவி அபர்ணா, செயலாளராக இளங்கலை வணிகவியல் 3-ம் ஆண்டு மாணவர் தமிழழகன், துணை தலைவராக இளங்கலை தமிழ் 2-ம் ஆண்டு மாணவி தவசிகா, இணை செயலாளராக இளங்கலை தமிழ் 1-ம் ஆண்டு மாணவி சினேகா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பெற்று, அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர். 

கணினி அறிவியல் துறை பேராசிரியர் செந்தில்குமார், தமிழ்த்துறைப் பேராசிரியர் பழனித்துரை மற்றும் பேராசியர்கள், அலுவலக பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் மாணவர் பேரவை தலைவர் நன்றி கூறினார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments