மணமேல்குடி அருகே கட்டுமாவடி அடுத்துள்ள முடுக்குப்பட்டி கடற்கரை கிராமத்தில் அரியவகை ஆமை ஒன்று கரை ஒதுங்கியது.
புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி தாலுக்கா, கட்டுமாவடி அருகில் உள்ள முடுக்குப்பட்டி கிராமத்தில் கடல் கரைக்கு சித்தாமை (Olive Ridley Sea Turtle – Lepidochelys olivacea) ஒன்று அடித்து வரப்பட்டது. திருச்சி தலைமை வனப்பாதுகாவலர் திரு சு. ராமசுப்பிரமணியன், இ.வ.ப., மற்றும் புதுக்கோட்டை மாவட்ட வன அலுவலர் திரு கு. சுதாகர் ஆகியோரின் உத்தரவுப்படியும், வழிகாட்டுதலின்படியும், அறந்தாங்கி வனச்சரக அலுவலர் எம். சதாசிவம், மணமேல்குடி பிரிவு வனவர் எஸ். அன்புமணி, பாதுகாப்பு காவலர் முத்துராமன் ஆகியோர்கள் சித்தாமையினை மீட்டு தனியார் படகில் ஏற்றி ஆழமான கடல் பகுதிக்கு எடுத்துச் சென்று பாதுகாப்பாக விட்டனர்.
பாதுகாப்பாக விடப்பட்ட சித்தாமை கடலில் நல்ல நிலையில் நீந்தி தனது வாழ்விடம் நோக்கி சென்றது. புதுக்கோட்டை மாவட்டத்தின் கடல் பகுதிகளில் சித்தாமை காணப்படுவது இங்கு ஏற்ற வாழ்விடம் உள்ளதை உறுதி செய்துள்ளது. இம்மாவட்டத்தில் ஆழம் குறைவான கடற்பகுதிகளில் கடற்புற்கள் அதிகப்படியாக காணப்படுவதால் உணவு தேடி இப்பகுதிக்கு சித்தாமை வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
வன உயிரின (பாதுகாப்பு) சட்டம், 1972, அட்டவணை I- பகுதி II-ன் படி சித்தாமை பாதுகாக்கப்பட்ட அரிய வகை கடல் வாழ் வன உயிரினமானகும்.
இவற்றை வேட்டையாடுவது அல்லது தீங்கு விளைவிப்பது தடைசெயய் ப்பட்டுள்ளது. மீறுவோர்க்கு வன உயிரின (பாதுகாப்பு) சட்டம், 1972, பிரிவு 51-ன் படி மூன்று வருடத்திற்கு குறையாமல் ஏழு வருடம் வரை சிறைத்தண்டையும் மற்றும் ரூ.10,000/-க்கும்; குறையாத அபராதமும் விதிக்க வழி வகை உள்ளதால், கடல் வாழ் வன உயிரினங்களை பாதுகாகக் வேண்டும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.